கால்நடை கடத்தல் வழக்கு திரிணாமுல் மூத்த தலைவர் கைது: மேற்கு வங்கத்தில் சிபிஐ நடவடிக்கை

பிர்பும்: மேற்கு வங்கத்தில் கால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த அமைச்சர் பார்தா சட்டர்ஜி சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருடைய பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், கால்நடை கடத்தல் வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முதல்வர் மம்தாவுக்கு மிக நெருங்கியவருமான அனுப்ரதா மண்டலுக்கு தொடர்பு இருப்பது சிபிஐ.க்கு … Read more

'உலகில் போர்களை தடுக்க மோடி தலைமையில் குழு அமைக்கலாம்' – மெக்சிகோ அதிபர் யோசனை

உலகில் போர்களை நிறுத்த பிரதமர் மோடி உள்ளிட்ட மூன்று உலகத் தலைவர்களைக் கொண்ட ஆணையத்தை உருவாக்க வேண்டும் என மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் யோசனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 5 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. அதேபோல் சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சி நடத்தி உள்ளது.  இப்படியாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் போர் பதற்ற சூழல், உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் … Read more

உ.பி படகு விபத்து: 4 பேர் உயிரிழப்பு

பாண்டா: உத்தர பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் உள்ள மர்க்கா என்ற பகுதியிலிருந்து ஒரு படகில் சுமார் 40 பேர், பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஜராலி படித்துறைக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு யமுனை ஆற்றில் கவிழ்ந்தது. 13 பேர் நீந்தி கரையேறினர். 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட பலர் நீரில் மூழ்கிவிட்டதாக அஞ்சப்படுகிறது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் … Read more

உபி.யில் படகு கவிழ்ந்து யமுனை ஆற்றில் 20 பேர் மூழ்கி பலி?

பாண்டா: உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 20 பேர் பலியானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில், பதேப்பூர் மாவட்டத்தில் உள்ள மர்காவில் இருந்து ஜராவுலி என்ற இடத்துக்கு நேற்று படகு ஒன்று சென்றது. இதில், 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததாலும், படகில் அதிகம் பேர் ஏற்றப்பட்டு இருந்ததாலும் அது திடீரென கவிழ்ந்தது. இதில் பலர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். முதலில் 2 பெண்கள், குழந்தை … Read more

தேர்தல் நேர இலவசங்கள் குறித்த வழக்கு | தேர்தல் ஆணையத்துக்கு தலைமை நீதிபதி கண்டிப்பு

புதுடெல்லி: ‘‘தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகளும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை’’ என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து தரப்பினரின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களையும் கேட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதி கிருஷ்ண முராரி … Read more

ஊழியர்களுக்கு கொரோனா அதிகரிப்பு உச்ச நீதிமன்றத்தில் மாஸ்க் கட்டாயம்: தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் கணிசமாக குறைந்திருந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்த போதிலும், பெரும்பாலோர் அதை பின்பற்றுவது இல்லை. அதேபோல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்களும், வழக்கு விசாரணைக்காக வருபவர்களும் பெரும்பாலும் முகக்கவசம் அணிவது இல்லை. இதன் காரணமாக, உச்ச நீதிமன்ற ஊழியர்கள் பலர் கொரோனாவால் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று முறையீடு செய்வதற்காக ஏராளமான … Read more

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் ஜெகதீப் தன்கர் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுடெல்லி: நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் (71) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக … Read more

பாஜ.வை சேர்ந்தவர் பீகாரில் சபாநாயகரை நீக்க மெகா கூட்டணி நோட்டீஸ்

பாட்னா: பீகாரில் பாஜ.வுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தலைவரான நிதிஷ் குமார் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். தனது கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சி செய்ததால், அதன் கூட்டணியை நேற்று முன்தினம் திடீரென முறித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 7 கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். அவர் நேற்று முன்தினம் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார். இம்மாநில சட்டப்பேரவை சபாநாயகராக பாஜ.வை சேர்ந்த விஜய்குமார் சின்கா உள்ளார். இவர் தனக்கு … Read more

ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை வீரர் உட்பட 3 பேர் வீர மரணம்

ஸ்ரீநகர் / மதுரை: ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாமுக்குள் நேற்று 2 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் தர்ஹால் பகுதியில் பர்கல் என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. நேற்று காலை 2 தீவிரவாதிகள் ராணுவ முகாமின் வேலியை கடக்க முயன்றனர். அப்போது … Read more

பிஞ்சில் பழுத்த 9ம் வகுப்பு மாணவன் போதைக்கு அடிமையாக்கி 20 மாணவிகள் பலாத்காரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருளை பயன்படுத்தும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மாணவிகளும் இதில் அடங்குவர். இந்நிலையில், கண்ணூரில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை 14 வயது மட்டுமே ஆன சக மாணவன் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது: வெளிமாநிலத்தில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவி, 8 மாதங்களுக்கு முன் கண்ணூர் பள்ளியில் சேர்ந்துள்ளார். அவருடன் நெருங்கி பழகிய சக … Read more