ஊழியர்களுக்கு கொரோனா அதிகரிப்பு உச்ச நீதிமன்றத்தில் மாஸ்க் கட்டாயம்: தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் கணிசமாக குறைந்திருந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்த போதிலும், பெரும்பாலோர் அதை பின்பற்றுவது இல்லை. அதேபோல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்களும், வழக்கு விசாரணைக்காக வருபவர்களும் பெரும்பாலும் முகக்கவசம் அணிவது இல்லை. இதன் காரணமாக, உச்ச நீதிமன்ற ஊழியர்கள் பலர் கொரோனாவால் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று முறையீடு செய்வதற்காக ஏராளமான … Read more

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் ஜெகதீப் தன்கர் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுடெல்லி: நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் (71) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக … Read more

பாஜ.வை சேர்ந்தவர் பீகாரில் சபாநாயகரை நீக்க மெகா கூட்டணி நோட்டீஸ்

பாட்னா: பீகாரில் பாஜ.வுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தலைவரான நிதிஷ் குமார் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். தனது கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சி செய்ததால், அதன் கூட்டணியை நேற்று முன்தினம் திடீரென முறித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 7 கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். அவர் நேற்று முன்தினம் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார். இம்மாநில சட்டப்பேரவை சபாநாயகராக பாஜ.வை சேர்ந்த விஜய்குமார் சின்கா உள்ளார். இவர் தனக்கு … Read more

ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை வீரர் உட்பட 3 பேர் வீர மரணம்

ஸ்ரீநகர் / மதுரை: ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாமுக்குள் நேற்று 2 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் தர்ஹால் பகுதியில் பர்கல் என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. நேற்று காலை 2 தீவிரவாதிகள் ராணுவ முகாமின் வேலியை கடக்க முயன்றனர். அப்போது … Read more

பிஞ்சில் பழுத்த 9ம் வகுப்பு மாணவன் போதைக்கு அடிமையாக்கி 20 மாணவிகள் பலாத்காரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருளை பயன்படுத்தும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மாணவிகளும் இதில் அடங்குவர். இந்நிலையில், கண்ணூரில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை 14 வயது மட்டுமே ஆன சக மாணவன் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது: வெளிமாநிலத்தில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவி, 8 மாதங்களுக்கு முன் கண்ணூர் பள்ளியில் சேர்ந்துள்ளார். அவருடன் நெருங்கி பழகிய சக … Read more

இமாச்சல் பாஜ அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இவருடைய அரசுக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இது குறித்து அவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர்  பேசினர். எதிர்க்கட்சியினரின் இந்த குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சியினர் மறுத்தனர். விவாதத்துக்கு  முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பதிலளித்து கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சி … Read more

பிரதமர் மோடிக்கு ராக்கி அணிவித்து அவரிடம் வாழ்த்துப் பெற்ற சிறுமிகள்..!

ரக்சா பந்தன் விழாவையொட்டித் தனக்கு ராக்கி அணிவித்த சிறுமியருக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி அவர்களுக்கு மூவண்ணக் கொடி வழங்கி வந்தே மாதரம் என முழக்கமிட்டார். பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் குழந்தைகள் பிரதமர் மோடியின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு ராக்கி அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். ரக்சா பந்தன் விழா முடிந்த பின், வீடுதோறும் மூவண்ணக் கொடி என்பதைக் குறிக்கும் வகையில் அங்கு வந்திருந்த சிறுமியர் அனைவருக்கும் பிரதமர் மோடி தேசியக் கொடியை வழங்கியதுடன் அவர்களுடன் சேர்ந்து வந்தே … Read more

மக்கள் நலப் பணியாளர்களுக்கு 2 வார அவகாசம் விரும்பினால் பணியில் சேர்ந்து கொள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: அடுத்த இரண்டு வாரத்தில் விருப்பப்படும் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் குமணன், ‘மகாத்மா காந்தி ஊரக … Read more

விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் இருந்த நிலையில், பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தன்னுடைய தனிப்பட்ட சட்டப்பிரிவு 142 அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்நிலையில், நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சிறையில் நளினி நன்னடத்தையுடன் இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவரால் எந்தவித … Read more

ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக கூறி ரூ.3 கோடி வசூலித்து முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக் கூடாது. காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்,’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி 12ம் தேதி ஜாமீன் வழங்கியது.  இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் … Read more