கர்நாடக அரசு மீது ஊழல் புகார் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 13 ஆயிரம் பள்ளிகள் கடிதம்
பெங்களூரு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ”கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் கெம்பண்ணா அண்மையில், தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனி ரத்னா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். … Read more