தலித் இளைஞர் மீது தாக்குதல்..!! நாற்காலியில் அமர்ந்தது ஒரு குற்றமா ?

மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கபில்தரா யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் ஹல்லு அஹிர்வார் (35) என்பவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு சென்ற அவர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். இதை கண்ட ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ரோகித்சிங், தாக்கூர் ஆகியோர் ஹல்லுவை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஹல்லுவுக்கு காயம் ஏற்பட்டது. பொது மக்கள் விலக்கிவிட்ட பிறகு ஹல்லு அங்கிருந்து சென்றார். பின்னர் … Read more

மாதிரிகளை உடனே அனுப்புங்க.. தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு..!

2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் அலங்கார ஊர்திகளின் மாதிரி மற்றும் தகவல்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ்பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும், பல்வேறு துறைகள் மற்றும் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்: மத்திய அரசு அறிவிப்பு!

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் ஐந்து கிலோ உணவு பொருள்கள் இலவசமாக வழங்கும் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள் வருவாய் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ஏற்கனவே … Read more

இலவச உணவு தானியங்கள்: ரேஷன் அட்டை தாரர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

PMGKAY: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மோடி அரசிடமிருந்து வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் வரை இலவச ரேஷன் பலனைப் பெறுவார்கள். பி.எம்.ஜி.கே.ஒய் திட்டம் டிசம்பர் 2022 வரை நீட்டிப்பு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா … Read more

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாகியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, கோ லொக்கேசன் முறையில் இமாலய முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பங்குச்சந்தையை பற்றி அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை ஆலோசகராக நியமித்து அவருக்கு அளவுக்கு அதிகமான சலுகைகள் வழங்கியது சர்ச்சை கிளப்பின. கோ லொக்கேசன் முறைகேட்டில் பல கோடி ரூபாய் … Read more

கால்வாயில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு அறிவிப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் அங்கிதாவின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருக்கிறார். உத்தராகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்கு சொந்தமான ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார். முன்னதாக, கடந்த 18-ம் தேதி முதல், சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற … Read more

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!

“ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்து வகுப்புவாதத்தை பரப்பி வருகிறது. வகுப்புவாதத்தைப் பரப்புவது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து. எனவே, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகளை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக ஆளும் அரசுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் … Read more

சிக்கியது ’மிஷன் 2047’ சிடி… பதறிப் போன அதிகாரிகள்- PFI போட்ட பிளான்?

PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்த விஷயம் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனுடன் தொடர்புடைய RIF, CFI, AIIC, NCHRO, நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக 17க்கும் மேற்பட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ ரெய்டு நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 1,300க்கும் அதிகமான வழக்குகள் … Read more

பெரும்பான்மை, சிறுபான்மை உட்பட அனைத்து வகுப்புவாதத்தையும் காங்கிரஸ் எதிர்க்கும்: ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை

டெல்லி : பெரும்பான்மை, சிறுபான்மை உட்பட அனைத்து வகுப்புவாதத்தையும் எப்போதும் காங்கிரஸ் எதிர்க்கும் என ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை விடுத்துள்ளார். மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்ப மதத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து போராடுவது, மதச்சார்பின்மை மற்றும் சமுதாயத்தின் பன்முக கலாசாரத்தை பாதுகாத்து கொண்டாடுவதே காங்கிரஸின் கொள்கை என அவர் கூறினார்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்கியுள்ளது மத்திய அரசு. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் … Read more