டெல்லியில் 4 அடுக்குமாடி இடிந்து விழுந்து விபத்து: 5 தொழிலாளர்கள் மீட்பு

புதுடெல்லி: டெல்லியில் 4 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பலர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. தலைநகர் டெல்லியின் ஆசாத் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஷீஷ் மஹாலில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. நான்கு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருந்ததால், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தகவலறிந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 தொழிலாளர்களை மீட்டனர். … Read more

தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மத்தியில் முகுல் வாஸ்னிக் ம.பி பொறுப்பில் இருந்து நீக்கம்: சோனியா காந்தி உத்தரவால் பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் பணிகள் நடைபெறும் நிலையில் மத்திய பிரதேச மாநில பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக்கை அந்த பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக். 17ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக மீண்டும் ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்படுவாரா? அல்லது கட்சியின் மூத்த தலைவர்கள் எவரேனும் தலைவராக தேர்வு செய்யப்படுவார்களா? என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ராகுல்காந்தி ஒருவேளை தலைவர் … Read more

பணியில் கவனம் செலுத்தாத 4 அமைச்சர்களை நீக்க முடிவு: ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி

திருமலை: பணியில் கவனம் செலுத்தாத 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய இருப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன் தெரிவித்துள்ளார். ஆந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைமை தாங்கி முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: அமைச்சர்கள் சிலர் தவறு செய்கிறார்கள். இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்பேன். மாற்றம் இல்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஏற்கனவே பல்வேறு சர்வேக்கள் மூலம் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளை தயார் செய்து பெற்றுள்ளேன். கட்சி மற்றும் ஆட்சிக்கான குரலை … Read more

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பேசும்போது திடீரென மைக்கை பிடுங்கிய மர்ம நபர் – வைரல் வீடியோ!

தெலுங்கானா மாநிலத்தில் விழா ஒன்றில் பாஜகவைச் சேர்ந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசும்போது திடீரென மேடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரது மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் பாக்யநகர் கணேஷ் உத்சவ் சமிதியின் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் பங்கேற்பதற்காக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஹைதராபாத் வந்துள்ளார். விழாவின் ஒரு பகுதியாக மேடையில் ஏறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் ஹிமந்தா சர்மா சொற்பொழிவாற்றி கொண்டிருந்தார். அப்போது மேடையில் … Read more

நுபுர் சர்மாவின் தலை தப்பியது… கைது செய்ய கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: முகமது நபிகள் குறித்து அவதூறான கருத்துகளை கூறிய நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சியில் அவதூறான வகையில் சர்ச்சை கருத்துகளை பேசியதாக பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபர் சர்மா மீது எதிர்ப்பு கிளம்பியது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் போராட்டம் நடத்திய நிலையில், அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. இதனையடுத்து அவர் பாஜகவில் இருந்து … Read more

ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை: யுஜிசி விளக்கம்

டெல்லி: வழக்கமான படிப்புக்கு இணையானது ஆன்லைன் படிப்பு என யுஜிசி விளக்கம் அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஆன்லைன் படிப்புகள் மற்றும் தொலைதூர படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, பல் நுழைவு வெளியேறுதல் (Multiple Entry and Exit), விருப்பதெரிவு … Read more

காலையிலேயே குடிபோதையில் பாடம் நடத்திய ஆசிரியை – கையும் களவுமாக சிக்கிய பின்னணி!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில், அதிகாலையில் மது அருந்திவிட்டு பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியை ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியை கங்கலக்ஷம்மா பணியாற்றி வருகிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் பாடம் நடத்தும் போது மது அருந்தி, மாணவர்களை அடிப்பது, சக ஊழியர்களிடம் சண்டை போடுவது … Read more

ஒற்றுமை பயணத்தில் ராகுல் அணிந்த டி-ஷர்ட்டின் விலையைக் குறிப்பிடும் பாஜக விமர்சனமும், காங். பதிலடியும்

சென்னை: இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டி-ஷர்ட்டின் விலையை குறிப்பிட்டு பாஜக விமர்சனம் ஒன்றை இணையவெளியில் முன்வைத்துள்ளது. அதற்கு, காங்கிரஸும் நெட்டிசன்களும் செய்த ரியாக்‌ஷன் என்ன என்பதைப் பார்ப்போம். பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஒரு போஸ்ட் ஷேர் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் படம் இடதுபக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்துள்ளார். இது … Read more

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு..! – குஜராத் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!

பில்கிஸ் பானு தொடர்பான வழக்கில் குஜராத் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்அளித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தனது குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார். 21 வயதான பில்கிஸ் பானு 5 மாதம் கர்ப்பினியாக இருந்தார். அவருக்கு 3 … Read more

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பேனா ? ராகுல்காந்தி கூறிய பதில் என்ன?

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார். மொத்தம் 150 நாட்களில் அவர் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். புலியூர்குறிச்சியில் 3-வது நாள் பாத யாத்திரையைத் தொடங்கிய ராகுல்காந்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும படிக்க | “தந்தையை இழந்தேன்.. அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன்” ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மக்களின் ஒற்றுமைக்காக நடைபயணம் தொடங்கியிருப்பது முரணாக … Read more