தமிழ்நாட்டுக்கு ரூ.4,758 கோடி வரிப் பகிர்வு விடுவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்ந்தளிப்புத் தொகையில் தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நேற்று அதன் தொகுப்பிலிருந்து வரி பகிர்ந்தளிப்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1.16 லட்சம் கோடியை விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்ட நிதி ரூ.4,758 கோடி ஆகும். மத்திய அரசு ரூ.58,332 கோடியைத்தான் வரி பகிர்ந்தளிப்பாக விடுவிக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இரண்டு தவணைகளையும் சேர்ந்து ஒரே நேரத்தில் விடுவித்துள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த … Read more

பாஜக தனது முதலாளிகளுக்காக மட்டுமே வேலை செய்து வருகிறது.. – அகிலேஷ் யாதவ் பகீர் குற்றச்சாட்டு..!!

சில தினங்களுக்கு முன்பாக பீகாரில் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜிணாமா செய்திருந்தார். நிதிஷின் துணிச்சலான முடிவை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாராட்டினார். பீகாரை போல உத்தரபிரதேசத்தில் இருந்து பாஜக தூக்கி எறியப்படும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்று இருந்த நிலையில் அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா … Read more

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொச்சி-தனுஷ்கோடி சாலையில் போக்குவரத்திற்கு அனுமதி

மூணாறு: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளா மாநிலம் மூணாறில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கொச்சி-தனுஷ்கோடி, மூணாறு-உடுமலை சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடைபட்டது. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் சாலையில் ஏற்பட்ட மண்சரிவால், அவ்வழியே போக்குவரத்துக்கு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் மூணாறில் இருந்து தமிழ்நாடு செல்லும் வாகனங்கள் ஆனைச்சால் ராஜாக்காடு வழியாக திருப்பி விடப்பட்டது. அதேபோல், மூணாறிலிருந்து மறையூர் செல்லும் சாலையில் எட்டாம் மைலுக்கு அருகில் சாலையின் ஒருபகுதி முழுமையாக சேதமடைந்தது. … Read more

“கிறிஸ்தவ பெண்ணை காதலிப்பதாக சொன்னேன்.அதற்கு என் அப்பா..”-தேஜஸ்வி யாதவ் பகிர்ந்த ருசிகரம்!

நேற்று பீகார் மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராக பதவியேற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், தனது மனைவி ரேச்சலை “சிறந்த துணை” என்று வர்ணித்து, அவரை திருமணம் செய்யும்போது குடும்பத்தினர் அனைவரும் தனது முடிவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு ஆதரவளித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். “முதலில் என் அப்பாவிடம் (லல்லு பிரசாத் யாதவ்)‘நான் இந்த பெண்ணுடன் டேட்டிங் செய்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், ஆனால் அவள் கிறிஸ்துவ மதம்’ என்று தெரிவித்தேன். அதற்கு என்னுடைய … Read more

மேற்கு வங்கம் | பானி பூரி சாப்பிட்ட 100+ பேருக்கு உடல்நிலை பாதிப்பு

ஹூக்லி: மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் சாலையோரம் விற்பனை செய்யப்பட்ட பானி பூரியை வாங்கி சாப்பிட்ட மக்களில் நூற்றுக்கும் மேலானவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகனங்கள் பரபரக்கும் இந்திய நகரங்களின் சாலை ஓரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற துரித உணவான பானிபூரி விற்பனை செய்வது வழக்கம். நம் ஊர் பக்கங்களில் மாலை நேரத்தில் இது விற்பனை செய்யப்படுவது வழக்கம். வட மாநிலங்களில் சிறிய அளவிலான … Read more

விவசாயிகள் உதவித் தொகை பெற ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம், ஒன்றிய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் பிப்ரவரி 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6,000 மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை, 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக … Read more

கணவர் கொடுமையால் அமெரிக்காவில் தற்கொலை செய்த மகள்.. கண்ணீருடன் பெற்றோர் வைக்கும் கோரிக்கை!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உருக்கமான வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் மன்தீப் கவுரின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, அவரது உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் நகரைச் சேர்ந்த மன்தீப் கவுர் என்ற 30 வயதான பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் திருமணம் நடந்தது. இதன்பின்னர் இந்தத் தம்பதியினர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் … Read more

நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்கையும் டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துகள் நாடு முழுவதும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. ஆனால், நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த உதய்ப்பூர் தையல் தொழிலாளி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதற்கிடையில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நுபுர் சர்மா மீது வழக்குகள் தொடரப்பட்டன.இந்நிலையில் தன் மீது நாட்டின் பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை டெல்லிக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நுபுர் சர்மா ஒரு மனு தாக்கல் … Read more

மோடியின் சொல் பேச்சை கேட்காத யோகி… உ.பி.., யில் செய்யப் போகும் தரமான சம்பவம்!

என்னதான் அரசியல் கட்சிகள் நாட்டின் வளர்ச்சி ,முன்னேற்றம் என்றெல்லாம் பேசினாலும், தேர்தல் போரில் வெல்வதற்கு அவர்கள் இலவசங்களையே கவசங்களாக அணிந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டை கிட்டதட்ட அரை நூற்றாண்டுகள் ஆண்ட கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி, தலைநகர் டெல்லியை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால் வரை இதற்கு யாரும் விிதிவிலக்கில்லை. இவர்களின் வரிசையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் விரைவில் சேர உள்ளார். ரக்ஷபந்தன் திருநாளை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்றும், நாளையும் பெண்கள் அரசுப் … Read more

இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் போது ஏற்படும் டிராஃபிக்கால் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்த நிலையில் தான், அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையெல்லாம் சரிசெய்யும் விதமாகவும், வாகன … Read more