'இன்னொருவரின் கால்களை வாயால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி' – ஒடிஷாவில் அதிர்ச்சி

மயூர்பஞ்ச்: ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவரை இரண்டு பேர் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் ஒரு நபர் தடியுடன் தோன்றுகிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளியை மிரட்டி மற்றொருவரின் கால்களை வாயால் சுத்தம் செய்ய வற்புறுத்துகிறார். அவர் மறுக்க, பின்னர் தலைமுடியை பிடித்து அவர்களே அவரை சுத்தம் செய்ய வைக்கின்றனர். அப்படி சுத்தம் செய்த பின்னரே அந்த மாற்றுத்திறனாளியை விடுகின்றனர். இதன்பிறகு அந்த மாற்றுத்திறனாளியை தரையில் அமர்ந்து அழுகிறார். இடையில் … Read more

உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான கட்டண வரம்பு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ரத்து – மத்திய அரசு

உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான கட்டண வரம்பு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 21 ஆயிரம் ரூபாயாக குறைந்ததை அடுத்து டிக்கெட் விலை உயர்வை தடுக்கும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், விமான எரிபொருள் விலையில் ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டவுடன், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான கட்டண வரம்பை அரசு மறுமதிப்பீடு செய்யும் என்றும் மத்திய அமைச்சர் … Read more

12 வயதில் நடந்த பலாத்காரம் 28 ஆண்டுக்கு பிறகு மகனால் பெண்ணுக்கு நீதி கிடைத்தது: குற்றவாளி சகோதரர்கள் கைது

ஷாஜகான்பூர்: தனது 12 வயதில் நடந்த பலாத்கார சம்பவத்திற்கு, 28 ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது மகன் மூலமாக நீதி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரின் சர்தார் பஜார் பகுதியை சேர்ந்த பெண், கடந்த 1994ம் ஆண்டு அவரது 12 வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். உறவினர் வீட்டில் வசித்து வந்த அந்த சிறுமியை, வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் 2 பேர் பலமுறை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சிறுமிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. … Read more

“நன்றி அண்ணா… இன்று முதல் அவர்களுக்கு பின்னடைவு தொடக்கம்” – ஸ்டாலின் வாழ்த்துக்கு தேஜஸ்வி பதில்

பிஹார்: துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தேஜஸ்வி யாதவ். பிஹார் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார். அதன்படி, நேற்று மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிஹார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை … Read more

பாலிவுட் நடிகர் அமீர்கான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தரிசனம்

பாலிவுட் நடிகர் அமீர்கான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார். அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக இருப்பதை முன்னிட்டு, அதன் வெற்றிக்காக அவர் பொற்கோவிலில் தரிசனம் செய்து வேண்டினார். அப்படத்தில் அவருடன் நடித்துள்ள மோனாசிங்கும் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதலளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. லால்சிங் சத்தா படத்தில் சீக்கியர் வேடத்தில் அமீர்கான் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.   Source link

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பணி மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார். தற்போது பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனக்கு அடுத்தபடியாக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டியவரின் பெயரை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் 26ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக தனக்கு அடுத்து 2வது இடத்தில் … Read more

7 கட்சிகளின் ஆதரவுடன் 8வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வரானார் தேஜஸ்வி

பாட்னா: பாஜ.வை கழற்றி விட்டு, மெகா கூட்டணியுடன் புதிய அரசு அமைத்த நிதிஷ் குமார், பீகார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். பீகாரில் பாஜ உடனான மோதலைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொள்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், அடுத்த சில மணி நேரத்தில் லாலுவின் … Read more

இலவசங்கள் நமது குழந்தைகளின் உரிமையை பறித்து, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார். பானிப்பட்டில் 2ஜி எத்தனால் ஆலையை நாட்டிற்கு அர்பணித்தார் பிதமர் மோடி. அந்த விழாவில் பேசியவர்: அரசியல் சுயநலத்திற்காக குறுக்கு வழிகளை பின்பற்றும் மனப்பான்மை உள்ளவர்களால், எந்தவொரு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வுகாண முடியாது. குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைத்தட்டல் மற்றும் அரசியல் ஆதாரங்களை பெறலாமே தவிர, … Read more

நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம்..! – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து அவர் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையும் நடைப்பெற்றது. இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகிநுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய … Read more

விடை பெற்றார் வெங்கையா புதிய துணை ஜனாதிபதி தன்கர் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்றுடன் ஓய்வு பெற்றார். புதிய  துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்கிறார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான வெங்கயைா நாயுடு, கடந்த 2017ம் ஆண்டு, ஆகஸ்ட் 11ம் தேதி  நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். நேற்றுடன் அவர் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். மாநிலங்களவை தலைவராகவும் அவர் இருந்தார். நேற்றுடன் தனது பணிகளை முடித்துக் கொண்ட அவர், நாடாளுமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார். … Read more