அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான மனு – மத்திய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. முப்படைகளில் 17.5 வயது முதல் 21 வரையிலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. … Read more