திருப்பதியில் பசவராஜ் பொம்மை சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று காலை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பா ரெட்டி வரவேற்றார். இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர்களுக்கு, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக் கப்பட்டது. இதனை தொடர்ந்து, திருமலையில், கர்நாடக மாநில அரசு சார்பில் ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்டு வரும், சத்திரத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில … Read more

1.33 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள்; 3 ஆண்டுகளுக்கு இன்டர்நெட் வசதியும் இலவசம்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடி..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 1 கோடியே 33 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார். அதன்படி சிரஞ்சேவி சுகாதார காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 33 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவிருக்கிறது. இலவச ஸ்மார்ட் போன்களுடன் 3 ஆண்டுகளுக்கு … Read more

பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறாக ட்வீட்- காவலர் சஸ்பெண்ட்

பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதற்காக கான்பூர் குற்றப்பிரிவு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஜய் குப்தா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் வெளியிட்டு வந்ததாகத் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்  ஆகியோரை குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த தகவல் காவல்துறை … Read more

டோலோ 650 மாத்திரை ரூ.1000 கோடி ‘இலவச’ விவகாரம் மிக மோசமானது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது மிக மோசமான விஷயம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் மற்றும் 9 மாநிலங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6-ம்தேதி திடீர் சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான டோலோ-650 மாத்திரைகாய்ச்சலுக்கு பயன்படுத்தப்படு … Read more

Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ

நியூடெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் விமானியின் உரிமத்தை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தியுள்ளது என்று வட்டாரங்கள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன. மே மாதம் முதல் தேதியன்று  SG-945 என்ற போயிங் B737 விமானம் வானில் பறந்துக் கொண்டிருந்தபோது, மேகங்களை தவிர்த்து விமானத்தை பறக்கச் செய்யலாம் என்றும், மேகங்களின் வழியாக பறக்க வேண்டாம் என்றும், தலைமை விமானியிடம், துணை விமானி கேட்டுக் கொண்டார், ஆனால் அதை கேப்டன் விமானி புறக்கணித்தார். மும்பையிலிருந்து துர்காபூருக்கு SG-945 என்ற போயிங் B737 விமானம் … Read more

ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதவி நீட்டிப்பு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை செயலாளராக அஜய் குமார் பல்லா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அஜய் குமாருக்கு மேலும் ஒரு வருடம் பதவி நீட்டிப்பு வழங்குவது என நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 1984ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமாரை கடந்த 2019ம் ஆண்டு இந்த பதவியில் அரசு நியமித்தது. தற்போது பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வரை இந்த பொறுப்பை வகிப்பார் என்று ஒன்றிய … Read more

ராஜஸ்தான் வங்கி கிளையில் ரூ.11 கோடி நாணயங்கள் மாயம் – டெல்லி உட்பட 25 இடத்தில் சோதனை

புதுடெல்லி: ராஜஸ்தானின் கராலி மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ மெகந்திப்பூர் கிளையில் ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் மாயமானதாக கடந்தாண்டு ஆகஸ்ட்16-ம் தேதி எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த ஆரம்ப கட்ட விசாரணையில், பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி, ஜெய்ப்பூர் உட்பட 25 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். வங்கி மேலாளர், பாதுகாப்பு அதிகாரி, நிதி அதிகாரிகள், வங்கி முன்னாள் … Read more

ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

டெல்லி: ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

குழந்தை இறந்துவிட்டதாகக் கூறிய தந்தை – சந்தேகமடைந்த தாத்தா… அம்பலமானது குழந்தை விற்பனை

பிறந்த பெண் குழந்தையை வேறொருவருக்கு ரூ.6,000க்கு விற்ற தந்தை உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள கோஹ்பூர் மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி புதன்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக  அக்குழந்தையின் தந்தை குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகமடைந்த குழந்தையின் தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கோஹ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். காவல் துறையினர் தீவிரமாக விசாரணை … Read more

இந்து மடாதிபதியை வீட்டுக்கு அழைத்து பாதப்பூஜை செய்த முஸ்லிம் தம்பதி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள ஹட்கோ நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் படே கான் (61). இவர் தார்வாடில் உள்ள ஓம்கார் மடாதிபதி ஸ்வரூபானந்தா சுவாமியின் பக்தர் ஆவார். ஓய்வு பெற்ற பேராசிரியரான சிக்கந்தர் படே கான் நேற்று ஸ்வரூபானந்தா சுவாமியை தனது வீட்டுக்கு வரவழைத்தனர். அவருக்கு சிக்கந்தர் படே கான் தன் மனைவியுடன் இணைந்து பாதப்பூஜை நடத்தி ‘ஓம் நம சிவாய’ என மந்திரத்தை கூறினர். இதையடுத்து அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை ஸ்வரூபானந்தா … Read more