மாதவிடாய் சுகாதாரம்: செயலை விட விளம்பரமே அதிகம்!

அரசும், தன்னார்வ அமைப்புகளும் மாதவிடாய் மற்றும் அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுத்தம், சுகாதாரம் குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேட்களின் பயன்பாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தூய்மையான தீர்வாக கருதப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், “கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தும் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கையை … Read more

என்.வி.ரமணாவின் பதவிகாலம் 26ம் தேதியுடன் முடியும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியின் பதவிகாலம் 74 நாட்களே: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு கோரிக்கை என்னாச்சு?

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்க உள்ள நிலையில், அவர் வெறும் 74 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருப்பார். அதேநேரம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான கோரிக்கை நீண்டநாட்களாக நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் வழக்கமான நடைமுறைகளை ஒன்றிய சட்ட அமைச்சகம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக … Read more

ரூ.112 கோடி! போதைப் பொருள் கடத்திய தமிழக இளைஞர் பெங்களூரில் கைது! சிக்கியது எப்படி?

பெங்களூரு ரயில் நிலையத்தில் 112 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹெராயின் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவரின் டிராலி பேக்கில் 16 கிலோ அளவுக்கு ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் … Read more

பாபா ராம்தேவின் சர்ச்சை கருத்து..! – இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்..!

அவ்வபோது மருத்துவத்திற்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார் பாபா ராம்தேவ். சில மாதங்களுக்கு முன்பாக நவீன அலோபதி முட்டாள்தனமானது என்று பாபா ராம்தேவ் பேசியது பெரும் கண்டனத்தை எழுப்பியது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் அறிக்கை அப்போது வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாபா ராம்தேவ் மீண்டும் தனது கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் … Read more

நெருங்கும் பண்டிகை காலம்!: கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!!

டெல்லி: பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 19,406 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,41,26,994ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணம் அடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5,26,649 … Read more

'தனி பேரிடர் மேலாண்மை மையம் வேண்டும்' – அமித் ஷாவிடம் உத்தராகண்ட் முதல்வர் கோரிக்கை

உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை நேரில் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சருடன் கலந்து பேசிய அவர் உத்தரகண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேரிடர் பணிகள் குறித்தும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பேரிடர் காலங்களில் உத்தராகாண்ட் மாநிலம் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து வருகிறது. அப்போதெல்லாம் ஏற்படும் பேரிடர்களை பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் முன்னதாக தடுக்கவும், பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க மாநில … Read more

‘மிஷன் வாத்சல்யா’ திட்டமானது சிறார் நீதி சட்ட  நிபந்தனைகளுக்கு உட்பட்டது: மத்திய அரசு

புதுடெல்லி: “மிஷன் வாத்சல்யா திட்டம் தனியார் உதவியுடைய பங்களிப்பின்கீழ் நிறுவனம் சாரா பராமரிப்பு மூலம் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. இதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் கடினமான சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உதவ முடியும். இத்தகைய ஏற்பாடுகள் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 மற்றும் அதன் விதிகளின்படி நிபந்தனைகளுக்கு உட்பட்டது ” என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவையில் மதிமுக … Read more

விண்ணில் பறக்கத் தயாராகும் எஸ்.எஸ்.எல்.வி..! – பள்ளி மாணவர்களின் படைப்பால் ஆச்சரியம்..!

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பிஎஸ்எல்வி , ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதில் பிஎஸ்எல்வி ராக்கெட் 1800 கிலோ எடை வரையிலும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் 4000 கிலோ வரையிலும் உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. தொடர்ந்து, இஸ்ரோ மைக்ரோ – நானோ என்கிற 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி எனப்படும் ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் ராக்கெட்டை … Read more

வீடியோ காலில் எம்பி நிர்வாண போஸ்; ஆந்திர முதல்வர் கடும் அப்செட்: சஸ்பெண்ட் செய்ய திட்டம்

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரி காவல் ஆய்வாளராக இருந்தவர் கோரண்ட்லா மாதவ். இவர் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது அக்கட்சி எம்பி திவாகர், போலீசார் குறித்து அவதூறாக பேசியதால் தனது மீசையை முறுக்கி, போலீசார் குறித்து அவதூறாக பேசினால் நாக்கை அறுப்பேன் என கூறினார். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் தனது காவல் ஆய்வாளர் பதவியை ராஜினாமா செய்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் 2019ம் ஆண்டில் இந்துபுரம் எம்பியாக வெற்றி … Read more

திறம்பட பணியாற்றாவிட்டால் வெளியேறுங்கள்! BSNL ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

திறம்பட பணியாற்றுங்கள்! அவ்வாறு பணியாற்ற முடியாவிட்டால் வெளியேறுங்கள் என்று பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் திணறி வரும் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூட்டத்தில் இதை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட பணியை திறம்பட செய்து நிறுவனத்தை சிறப்பாக உயர்த்த வேண்டும், தவறினால் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். “சர்க்காரி” மனப்பான்மையை கைவிட்டு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் … Read more