நடுக்கடலில் சரக்கு கப்பலில் இருந்து பெறப்பட்ட பேரிடர் எச்சரிக்கை.. உடனடியாக விரைந்து 22 பேரை மீட்ட கடலோர காவல்படை!
குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரை அருகே உள்ள அரபிக்கடல் பகுதியில், சரக்குக் கப்பலில் இருந்து பேரிடர் எச்சரிக்கை பெறப்பட்டதையடுத்து, கடலோர காவல் படையினர் துருவ் ரக ஹெலிகாப்டர்களில் சென்று 22 ஊழியர்களை மீட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர் பக்கானிலிருந்து இந்தியாவின் கர்வார் பகுதிக்கு, 6 ஆயிரம் டன் ஆஸ்பால்ட் ((Bitumen )) திரவத்தை ஏற்றி வந்த கப்பலில், நீர் உட்புகுந்து வெள்ளம் ஏற்பட்டதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Source link