ஆசம் கானின் மனைவிக்கு அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானின் மனைவிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். பல்வேறு வழக்குகளில் உத்தரபிரதேச மாநிலத்தின் சீதாப்பூர் சிறையில் இருப்பவர் முன்னாள் எம்.பி. ஆசம் கான். வழக்குகளில் ஜாமீன் பெற்று தற்போது வெளியே உள்ளார் ஆசம் கான். இவர் தற்போது ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு ஆசம் கானின் மனைவி … Read more

Covid Booster Dose: பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு … Read more

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட பொதுமக்கள்

சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை, பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேகவெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்திருந்த பெண் ஒருவர், இடிபாடுகளுக்கிடையே கைகளை நீட்டி தன்னை காப்பாற்றக் கோரினார். காயங்களுடன் இருந்த பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர்.

லீனாவின் போஸ்டர் விவகாரம்; ‘காளி’ குறித்து பெண் எம்பி சர்ச்சை கருத்து: திரிணாமுல் காங்கிரஸ் திடீர் விளக்கம்

கொல்கத்தா: இயக்குனர் லீனாவின் போஸ்டர் விவகாரம் தொடர்பாக திரிணாமுல் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அது அவரது தனிப்பட்ட கருத்து என்று திரிணாமுல் கட்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை சமீபத்தில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, தன்பால் ஈர்ப்பாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. … Read more

”என் பொண்டாட்டி இல்லாத வாழ்க்கை எனக்கு வேணாம்” – 70 வயது முதியவரின் விபரீத முடிவு!

அன்பிற்கினியவர்களை தற்காலிகமாக பிரிவது எப்போதும் எவருக்குமே பெரும் துயரம்தான். ஆனால் பல ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்த துணைவியை பிரிந்த வருத்தத்தை, சோகத்தை எந்த வார்த்தைகளாலும் அடக்கிட முடியாது. எத்தனை முறை சண்டையிட்டாலும், கோபப்பட்டாலும் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்க்கையை தொடரும் தம்பதிகள் குறித்து அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மறைந்த தன்னுடையை இணையை பிரிந்து வாழ முடியாத விரக்தியில் இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தன் உயிரையே மாய்த்துக்கொண்ட உருக்கமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது. … Read more

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை (வியாழக்கிழமை) திருமணம் நடைபெறவுள்ளது. எளிமையாக நடைபெறும் இந்தத் திருமண விழாவில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து பகவந்த் மான் முதல்வர் பொறுப்பேற்றார். 48 வயதாகும் பகவந்த் மான் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். பஞ்சாப் மக்கள் மத்தியில் ஓர் … Read more

மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா – துணை ஜனாதிபதி ஆகிறார்?

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்தவர், முக்தார் அப்பாஸ் நக்வி. இவர், 2016 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட, முக்தார் அப்பாஸ் நக்விக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் மத்திய அமைச்சர் பதவியில் தொடர முடியாத சூழ்நிலை … Read more

இந்தியாவில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த கால இடைவெளி 6 மாதமாக குறைப்பு

இந்தியாவில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், இரண்டாவது தடுப்பூசி செலுத்திய 6 மாதத்திற்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.   Source link

கேரள அமைச்சர் சஜி செரியன் ராஜினாமா

திருவனந்தபுரம்: அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கேரள அமைச்சர் சஜி செரியன் பதவி விலகினார். மீன்வளத்துறை அமைச்சராக இருந்த சஜி செரியன் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று இன்று காலை வரை கூறிவந்த நிலையில் சஜி செரியன் மாலையில் ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் முதல்வருக்கு நாளை இரண்டாவது திருமணம்; டாக்டர் பெண்ணை கரம்பிடிக்கிறார்!

48 வயதாகும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் நாளை சண்டிகரில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது. நகைச்சுவையாளர், பாடகர், நடிகர், சமூக சேவகர், அரசியல் பிரமுகர் என பன்முகத் திறமை கொண்டவர் தற்போதைய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று பகவந்த் மான் முதல்வராக பதவி வகித்து வருகிறார். … Read more