22ல் காவிரி ஆணைய கூட்டம்: மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு

பெங்களூரு / புது டெல்லி: கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வ‌ந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. ஆணையத்தின் த‌லைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள‌ மேகேதாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள‌ தமிழக அரசு, மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் … Read more

ஒரே பேருந்தில் ஓட்டுநர், நடத்துனராக பணியாற்றும் கேரள தம்பதி: 20 ஆண்டுகளாக காதலித்து கொரோன ஊரடங்கில் கரம் பிடித்தவர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த காதல் தம்பதி ஒரே அரசு பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனராக பணியாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த கிரி மற்றும் தாரா காதல் தம்பதி. அம்மாநில அரசு பேருந்து ஒன்றில் கிரி ஓட்டுநராகவும், தாரா நடத்துனராகவும் பணியாற்றி வருகிறார். 20 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கொரோன ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்தனர். இந்த பேருந்தில் பயணிகள் பாதுகாப்பிற்காக 6 சிசிடிவி, அவசரகால் சுவிட்ச்கள், இனிமையான … Read more

சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகருடன் சந்திப்பு – தனி அணியாக செயல்பட போவதாக அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேர் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் தனி அணியாக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு சமீபத்தில் கவிழ்ந்தது. சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். அதன்படி சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் … Read more

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைரை உடனடியா சிறையில் இருந்து விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைரை உடனடியா சிறையில் இருந்து விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் தொடரப்பட்ட 6 வழக்குகளிலும் ஜுபைருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆல்ட் நியூஸ் இணையதள ஆசிரியர் முகமது ஜுபைர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவுகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

உயிரைவிட அந்த bagதான் முக்கியமா? ஓடும் ரயில்முன் தாவிய பெண்… திக் திக் நொடிகள்!

ரயில்வே ட்ராக்கை கடக்க முயலும் பலரும் மரணத்தை தழுவதும், மரணத்திலிருந்து தவறுவதுமான சம்பவங்கள் பலவற்றை பார்த்திருப்போம். அதில் இரண்டாவது ரகம் குறித்துதான் தற்போது பார்க்கப் போகிறோம். ஐ.ஏ.எஸ். அதிகாரி அவானிஷ் ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோதான் நெட்டிசன்களை அலறவிட்டிருக்கிறது. அந்த வீடியோவில், இரட்டை தண்டவாளம் உள்ள நடைமேடை இல்லாத இடத்தில் ரயில் ஒன்று நடு வழியில் நின்றுக்கொண்டிருக்க, அதிலிருந்து பயணிகள் சிலர் தங்களது குடும்பத்தோடு இறங்கி பக்கவாட்டில் இருக்கும் ட்ராக்கை கடக்க முயற்சிக்கிறார்கள். அதில் சிலர் … Read more

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற 2 அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 12 வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல் நாளில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் போராட்டம் நடத்தியதால் அவைகள் முடங்கின. இதையடுத்து அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், மக்களவையில் … Read more

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பி.டி. உஷா பதவியேற்பு

டெல்லி: மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வான முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, இன்று பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பி.டி. உஷா வாழ்த்து பெற்றார்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இவை உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு, … Read more

உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

தருமபுரி: வனப்பகுதியில் சடலமாக கிடந்த இரு கேரள இளைஞர்கள்; போலீஸ் விசாரணை

நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே கேரளாவைச் சார்ந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். சொகுசு காரை கைப்பற்றிய காவல்துறையினர் தற்கொலையா? கொலையா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் பூதனல்லி வனப்பகுதியில் கல்குவாரி ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்தக் கல்குவாரி அருகே இரண்டு சடலங்கள் இருப்பதைக் கண்ட, கால்நடை மேச்சலுக்கு சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான் … Read more