ஜம்மு காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் கைது -ஏராளமான ஆயுதங்கள் ஆவணங்கள் சிக்கின

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற அதிரடிச்சோதனைகளில் 7 தீவிரவாதிகள் சிக்கினர். தீவிரவாதிகளுக்கு நிதித்திரட்ட போதைப் பொருள் கடத்தும் கும்பல், தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கும் பல பைனான்சியர்களிடமும் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. அண்மையில் காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வந்து தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். அவர்களுக்கு ஆயுதங்கள், நிதி போன்றவை ஐ.எஸ். போன்ற தீவிரவாத இயக்கங்களால் வழங்கப்படுக Source link

பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி குறைப்பு!!

டெல்லி : பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு குறைத்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் லிட்டருக்கு 2 ரூபாய் ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. 

`உணவு தானியங்களுக்கு வரி விதிப்பது இதுவா முதல்முறை?’- ட்விட்டரில் நிர்மலா சீதாராமன் கேள்வி

உணவு தானியங்கள் மீது வரி விதிப்பு என்பது புதிதல்ல என்றும் அரிசி, கோதுமை மீதான வரி விதிப்பு குறித்து தவறான கருத்து நிலவுதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பிராண்ட் அல்லாத 25 கிலோ வரை சிப்பங்களில் விற்கப்படும் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் சில பதிவுகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

ஆள்சேர்ப்பு விண்ணப்பத்தில் ஜாதி விவரம் புதிதல்ல – ராணுவம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடெல்லி: ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பத்தில் ஜாதி சான்றிதழ், தேவைப்பட்டால் மதச்சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை எப்போதும் உள்ளது, இது அக்னி பாதை திட்டத்துக்கு மட்டும் கேட்கப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “இந்திய வரலாற்றில் முதல்முறையாக, ராணுவ வீரர்களுக்கான தேர்வில் ஜாதி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. தலித்துகள், பிற்படுத்தபட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோரை ராணுவத்துக்கு தகுதியானவர்களாக பிரதமர் மோடி கருதவில்லையா? அக்னி வீரர்களை உருவாக்க விரும்புகிறீர்களா … Read more

சீனா உருவாக்கும் புதிய கிராமம்- சாட்டிலைட் படங்களால் சர்ச்சை

இந்தியாவின் எல்லைக்குள் பாதுகாப்பு படைகளை தாண்டி ஊடுருவிச் செல்ல புதிய உள்சாலைகள், பாலங்களை சீனா அமைத்து வருவதை சாட்டிலைட் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.  டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளியான சாட்டிலைட் படங்களில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பூட்டான் எல்லைக்குட்பட்ட  பாங்டா என்ற அந்த கிராமத்தில் இருந்து, இந்தியாவின் படைகளை நேராகக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது Source link

உச்சநீதிமன்றம் உத்தரவு நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்கால தடை

புதுடெல்லி: நபிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்குகளில் நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைகாட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மா பாஜ.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவரை கடுமையாக விமர்சித்து மனுவை நிராகரித்தது. … Read more

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பு

டெல்லி :மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பு மேற்கொள்கிறார். காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகதாது குறித்து விவாதித்தால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்வர்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

புதுடெல்லி: ‘காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதித்தால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்வார்கள்’ என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் தெரிவித்துள்ளார்.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது இன்று நீதிபதி கன்வீல்கர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக … Read more

டெல்லி, ஹரியாணாவில் நீட் தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்ததாக 8 பேரை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த நீட் தேர்வில் ஒருசிலர் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி, ஹரியாணாவில் 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெறுவதைத் தடுக்க கடுமையான சோதனைகளும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதையும் மீறி டெல்லி மற்றும் ஹரியாணாவில் ஒருசிலர் ஆள்மாறாட்டம் செய்து … Read more

அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவ வீரர் தேர்வுக்கு சாதி, மதம் கேட்கப்படுகிறது: ஆம் ஆத்மி எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி:  அக்னி பாதை திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படும்போது சாதி கேட்கப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். அக்னிபாதை திட்டத்தின் கீழ் குறுகிய கால சேவையாற்ற ராணுவத்துக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் வீரர் தேர்வு செய்யப்படும்போது சாதி பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் … Read more