இந்தியாவில் பரவும் தக்காளி காய்ச்சல்: 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் பாதிப்பு

புதுடெல்லி: கரோனா வைரஸை தொடர்ந்து இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது கடந்த மே 6-ம் தேதி முதல் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் நெடுவத்தூர், ஆரியங்காவு, அன்சால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளது. இதுவரை 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளும், 10 வயதுக்குட்பட்ட 26 சிறுவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு … Read more

புதுச்சேரி: சட்டப்பேரவையில் நிதி ஆண்டு 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநிலத்தில் 2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, சட்டப்பேரவை … Read more

குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்காமல் இருப்பதற்கு பிரதமரின் நண்பர் அதானியே காரணம்.: மேகாலயா ஆளுநர்

மேகாலயா: குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்காமல் இருப்பதற்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானியே காரணம் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. அவர்களை அச்சுறுத்தவும் முடியாது. மேலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வைத்து விவசாயிகளை மிரட்ட முடியுமா? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தைவிட கட்சியே பெரியது: உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா கருத்து

அரசாங்கத்தைவிட கட்சியே பெரியது என்று உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா ட்வீட் செய்துள்ளது பல்வேறு வாதவிவாதங்களை எழுப்பியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக மாநில கேபினட் அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங் பொறுப்புவகித்து வந்தார். இவர் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சிக்கு புதிய மாநிலத் தலைமையை நியமிக்கும் பணியில் கட்சி மேலிடம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா ஒற்றை வரியில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், … Read more

2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: நிதிஷ்குமாரை முன்னிறுத்த ராஷ்டிரிய ஜனதா தளம் விருப்பமா?

டெல்லி: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஏற்று கொண்டால் பிரதமர் பதவிக்கு  நிதிஷ்குமார் வலிமையான வேட்பளராக இருப்பார் என்று பீகார் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகாரில் பாரதிய ஜனதா உடன் உறவை துண்டித்து கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்து கொண்டிருக்கிறார். அவரது அரசில் துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், … Read more

மீண்டும் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு: டெல்லியில் போலீஸ் குவிப்பு

டெல்லியில் விவசாய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உரிய முறையில் அமலாக்குவது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் விவசாய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்த உள்ளன. 75 மணி நேரம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி – ஹரியானா எல்லைப் பகுதியான டிக்ரியில் விவசாயிகள் வருகையை தடுக்க காவல் துறையினர் தடுப்புகளை வைத்துள்ளனர். இதற்கிடையே டெல்லிக்குள் நுழைய … Read more

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத் என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் அண்மையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவரது மகன் ஆசிஷ் மிஸ்ராவை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சம்யுக்த் கிசான் மோர்சா சார்பில் மஹாபஞ்சாயத்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் குறிப்பாக மாநில எல்லைகளில் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். முன்னதாக விவசாயிகளின் … Read more

நெல் சாகுபடி உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை: ஒன்றிய அரசு

டெல்லி: தமிழ்நாட்டில் நெல் சாகுபடி உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2021-2022-ல் நெல் சாகுபடி பரப்பு 22.05 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. 

குறிதவறாமல் குண்டுவீசி அழிக்கும் MQ-9B ட்ரோன்கள்: அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீனமான எம்கியூ – 9B ரக ட்ரோன்களை இந்தியா வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவீன கால யுத்தங்களில் ட்ரோன்களின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகெங்கும் ராணுவங்களில் பல வகை ட்ரோன்கள் பயன்பாட்டில் இருந்தாலும் அவற்றில் மிகச்சிறந்ததாக கருதப்படுவது எம்க்யூ – 9 B ட்ரோன்கள். அமெரிக்க தயாரிப்பு ட்ரோன்களான இவை தாக்குதலுக்கு பயன்படுவதுடன் கண்காணிப்பு பணிகளிலும் கி்ல்லாடியாக பார்க்கப்படுகிறது. எதிரி இலக்கு எங்கு மறைந்திருந்தாலும் குறிதவறாமல் அழிக்கும் வல்லமை கொண்டவை எம்க்யூ … Read more

காங்கிரஸ் தலைவர் விரைவில் தேர்வு: மதுசூதன் மிஸ்திரி தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த 1998 முதல் 2017 வரை காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தார். உடல் நலக் குறைவு காரணமாக 2017 டிசம்பரில் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். புதிய தலைவராக சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி கடந்த 2017 டிசம்பர் 16-ம் தேதி பதவியேற்றார். கடந்த 2019 ஏப்ரல், மே மாதங்களில் … Read more