காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: இன்று நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதன் பிறகு ஜூன் 17, 23 ஆகிய‌ தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்ட‌து. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மேகேதாட்டு திட்டம் … Read more

பவன் கல்யாண் பெயரை பச்சை குத்திய நடிகை

ஐதராபாத்: பவன் கல்யாண் பெயரை நடிகை அஷு ரெட்டி தனது உடலில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்திருப்பவர் அஷு ரெட்டி. கவர்ச்சி பாடல்களுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இவர் திடீரென நடிகர் பவன் கல்யாண் பெயரை ஆங்கிலத்தில் தனது விலா பகுதியில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அஷு ரெட்டி கூறும்போது, ‘நான் பவன் கல்யாணின் தீவிர ரசிகை. அவரது எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். சிறு வயது முதல் … Read more

அல்லு அர்ஜுனுடன் இணைகிறார் விஜய் சேதுபதி

ஐதராபாத்: அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்த படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கினார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் இந்த படம் இந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதில் பஹத் பாசில் கேரக்டரில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதையடுத்துதான் இந்த படத்துக்குள் … Read more

இரவுநேர விடுதிக்கு வெளியே நண்பர்களுக்குள் மோதல்.. திடீரென்று ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு..!

அரியானாவின் பஞ்சகுலா மாவட்டத்தில் இரவுநேர விடுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் திடீரென்று ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அப்போது விடுதிக்கு வெளியே 4 பெண்கள் நின்றிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் விடுதி பாதுகாவலர் மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மோஹித் என்பவரை போலீசார் கைது செய்தனர். Source link

பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்

புதுடெல்லி: பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் பெண் இயக்குனர் லீனா மணிமேகலையை பிரபல நடிகை கண்டித்துள்ளார். கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. கனடாவில் நடைபெற்ற ‘அண்டர் தி டெண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் இப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. ர்ச்சைக்குரிய இந்த படத்தின் போஸ்டர் டிவிட்டரில் டிரெண்டானது. அதில், காளி வேடமணிந்த பெண் ஒருவர், சிகரெட் … Read more

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 37 புள்ளி ஒன்பது பில்லியன் அமெரிக்க டாலராக  அதிகரித்த போதும், இறக்குமதி 63 புள்ளி ஐந்து எட்டு பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதனால், மே மாதத்தைவிட ஜூன் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 25 புள்ளி ஆறு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இரண்டு லட்சத்து இரண்டாயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. Source link

சிரஞ்சீவியின் காட்ஃபாதர் வீடியோ ரிலீஸ்

ஐதராபாத்: சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்துக்கான பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தை பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இதில் மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் உள்பட பலர் நடித்தார்கள். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். படத்துக்கு காட்ஃபாதர் என தலைப்பிட்டுள்ளனர். ஜெயம் ராஜா இந்த படத்தை இயக்குகிறார். மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். மலையாளத்தில் கவுரவ தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார். இதில் அந்த கேரக்டரில் சல்மான் … Read more

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பலத்த மழை – பல இடங்களில் நிலச்சரிவு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள காட்கோப்பர் மற்றும் சிப்லுன் பகுதிகளில் இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது. நிலச்சரிவுகளால்  மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  Source link

சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை இல்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு, இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. அதையும் மீறி பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. … Read more

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென பாகிஸ்தானில் தரையிறக்கம்..காரணம் என்ன?

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் எரிபொருள் அளவை காட்டும் சமிக்ஞை விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள், மற்றொரு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Source link