குடியரசு துணைத்தலைவர் தேர்தல் பற்றி பாஜக எம்.பி.க்கள் 5-ல் ஆலோசனை

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, ஆலோசிக்க 5-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி.க்கள் கூட்டம், நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜெய்சங்கர், அனுராக் தாக்கூர், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்குப்பின் அமைச்சர் பிரகலாத் … Read more

ஊனமுற்றோர் என்பதற்கு பதிலாக மாற்றுத்திறனாளி சொல்லை ஒன்றிய அரசு பயன்படுத்துமா? தயாநிதி மாறன் எம்பி. கேள்வி

புதுடெல்லி: ‘தேசிய அளவில் ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை ஒன்றிய அரசு பயன்படுத்துமா’ என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். உடல் ஊனமுற்றவர்களுக்கு ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லை தந்து அவர்களுக்கென தனி துறையையும், நல வாரியத்தையும் உருவாக்கி அவர்களின் நலன் காத்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் வழங்கியது, மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை … Read more

திருப்பதி கோயில் உண்டியலில் ஒரே நாளில் ரூ.5 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், விடுமுறை, விசேஷ நாட்கள் என்றில்லாமல் அனைத்து நாட்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. தினமும் சராசரியாக ரூ.4 கோடியை பக்தர்கள் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். சில நாட்களில் இது ரூ.5 கோடியை கடந்துவிடுகிறது. கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 6 முறை ரூ.5 கோடிக்கும் அதிகமாக உண்டியல் வசூல் வந்தது. ஜூலையில் மட்டும் உண்டியல் மூலம் ரூ.139 கோடி வருவாய் பதிவானது. இந்நிலையில், இந்த மாதத்தின் முதல் நாளே ஏழுமலையானின் உண்டியல் வருவாய் … Read more

சமூக வலைதளங்களில் மாற்றம் மோடி டிபி.யில் தேசியக் கொடி

புதுடெல்லி: தனது சமூக வலைதள பக்கங்களின் ‘டிபி’யில் பிரதமர் மோடி தேசியக்கொடியை வைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று மான் கி பாத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,  ‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுவது மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதி வரையில் தங்களின் காட்சி படமாக (டிபி) தேசியக்கொடியை வைக்க வேண்டும்,’ என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, … Read more

கேரளாவில் கனமழை 10 மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை: 3 நாட்களில் 12 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் மழையின் தீவிரம் மேலும் அதிகரித்து உள்ளது. கடந்த 3  நாளில் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு, இடுக்கி நெய்யாறு உள்பட அனைத்து … Read more

குற்றவியல் சட்டங்களை மாற்ற அரசு ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், `இந்திய தண்டனை சட்டம் 1860, குற்றவியல் தண்டனை சட்டம் 1973, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றில் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் வகையிலான திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறைகளின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து உள்துறை விவகாரத்துக்கான நாடாளுமன்ற குழுவின் 111 மற்றும் 128வது அறிக்கைகளில் … Read more

விமான நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் விமானத்தின் மீது மோதாமல் நூலிழையில் தப்பியது

டெல்லி விமான நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், இண்டிகோ விமானத்தின் மீது மோதவிருந்தது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது. ‘கோ பர்ஸ்ட்’ விமான நிறுவனத்தின் கார் ஒன்று பிற்பகலில், விமானம் நிறுத்திமிடத்திற்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அங்கு நின்ற இண்டிகோ நிறுவன விமானத்தை நோக்கி சென்ற அந்த கார், அதன் முன்பகுதிக்கு அடியில் நின்றது. கார் ஓட்டுநரிடம் மூச்சுக்காற்று சோதனை நடத்தி அவர் மது அருந்தவில்லை என … Read more

இந்தியா – மாலத்தீவு 6 புதிய ஒப்பந்தங்கள்: வீடுகள் கட்ட ரூ.790 கோடி கடன்

புதுடெல்லி: மாலத்தீவுக்கு இந்தியா ரூ.790 கோடி கடன் உதவி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். பிரதமர் மோடியை சந்தித்த அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே மாலத்தீவில் திறன் மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, வீட்டு வசதி, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு என 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து … Read more

தமிழக கிராமப்புற சாலைகளுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசிடம் அமைச்சர் பெரியகருப்பன் கோரிக்கை

புதுடெல்லி: ‘தமிழகத்தில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் நிதி ஒதுக்கும்படி ஒன்றிய அமைச்சரிடம் தமிழக ஊரகத் வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். அரசு முறை பயணமாக டெல்லி வந்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். அப்போது, தமிழக நலன் சார்ந்த  கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், பெரிய கருப்பன் அளித்த பேட்டி வருமாறு: … Read more

ஸ்ரீமதி கேஸ் மாதிரி ஏதாவது பண்ணலாமுன்னு ஐடியாவா ? அடங்காத வாத்தி..! மாணவியை மிரட்டிய கொடூரம்..!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதி மாதிரி ஏதாவது பண்ணலாமுன்னு ஐடியா வச்சிருக்கியா ? என்று கேட்டு, ஆசைக்கு இணங்க மறுத்த மாணவியை மிரட்டிய புதுச்சேரி தனியார் பள்ளி ஆசிரியரின் ஆபாச வாட்ஸ் ஆப் சாட்டிங் வெளியான நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். புதுச்சேரி 100 அடி சாலையில் மரபாலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்துவரும் மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் சகாய தோனி வளவன் என்கிற … Read more