தக்காளி காய்ச்சல் – எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில … Read more

பயங்கரவாத அச்சுறுத்தல் – பாதுகாப்பு அதிகரிப்பு!!

மும்பை அருகே ராய்காட் கடலில் கடந்த வியாழக்கிழமை ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா என்று மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல்கள் வந்தன. அதில் 2008ஆம் ஆண்டு நடந்ததை போல மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் … Read more

பெங்களூருவில் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு வாடகைக்கு விட மறுப்பு

பெங்களூரு: பெங்களூருவில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஹைஃபா என்ற பெண் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் அனைவரும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்பீர்கள். எனக்கு சுதந்திர தினம் எப்படி கழிந்தது பாருங்கள்” என பதிவிட்டு, அவருக்கும் வாடகை வீடு பிடித்து தரும் தரகருக்கும் இடையே நடந்த உரையாடலின் வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட் பதிவை … Read more

மணீஷ் சிசோடியாவுக்கு இறுகும் பிடி – சிபிஐ 'லுக் அவுட்' நோட்டீஸ்!

மதுபானக் கொள்கை விதிமீறல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதித்து சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது. டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், துணை முதலமைச்சராக இருப்பவர், மணீஷ் சிசோடியா. இவர், ஆட்சியிலும், கட்சியிலும் நம்பர் 2 இடத்தில் இருப்பவர். இதற்கிடையே, டெல்லி மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக, எதிர்க்கட்சியான பாஜக … Read more

ராஜிவ் காந்தி 78-வது பிறந்தநாள் தந்தையே, உன் கனவை நனவாக்க முயற்சிப்பேன்; ராகுல் உருக்கம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 78வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ராகுல் தனது டிவிட்டரில்,‘தந்தையே, நீங்கள் எப்போதும் என்னுடன், … Read more

குற்றவாளியை கண்டுபிடிக்க சாமியாரிடம் ஆலோசனை கேட்ட போலீசுக்கு நேர்ந்த கதி!

கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க சாமியாரிடம் ஆலோசனை கேட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. 17 வயது சிறுமியை கொன்ற வழக்கு தொடர்பாக சாமியாரிடம் ஆலோசனை கேட்ட அசோக் ஷர்மா என்ற உதவி எஸ்.ஐ-யின் வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் உதவி சப் இன்ஸ்பெக்டர் அசோக் ஷர்மா, கொலை குற்றவாளிகளின் பெயர் பட்டியலை அந்த சாமியாரிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறார். இது யூடியூப் … Read more

பாஜக ஆட்சி மன்றக் குழு மாற்றத்தின் எதிரொலி – ம.பி., ராஜஸ்தானில் புதிய தேர்தல் வியூகம்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு டிசம்பரில் ம.பி. மற்றும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் திட்டத்துடன் இந்த 2 மாநில தேர்தலுக்காக பாஜக பல புதிய வியூகங்களை அமைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தேசிய அளவில் பாஜக ஆட்சி மன்றக் குழுவில் பல மாற்றங்களை செய்தது. பாஜக ஆளும் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி மன்றக் குழுவில் இருந்தார். கடந்த … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 11,539 பேருக்கு கொரோனா… 43 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 11,539 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,39,429 ஆக உயர்ந்தது. * புதிதாக 43 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

59 வயதான தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம், கோலாழி பகுதியைச் சேர்ந்தவர் ரதிமேனன் (59). இவரது கணவர் மேனன் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு ப்ரீத்தி, பிரசீதா என இரு மகள்கள் உள்ளனர். ப்ரீத்திக்கு திருமணமாகி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். தனது தாய் கணவரை இழந்து, தனிமையில் தவிப்பதைப் பார்த்த இளைய மகள் பிரசீதா அவருக்கு மறுமணம் செய்துவைக்க முடிவு செய்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தாயை சம்மதிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து ரதிமேனனுக்கும், மண்ணுத்தி பாட்லிக்காடு பகுதியைச் … Read more

கர்நாடக முதலமைச்சர் பதவி: டி.கே.சிவகுமாருக்கு குமாரசாமி ஆதரவு!

கர்நாடக மாநில முதலமைச்சராக, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெறும் பட்சத்தில், அவருக்கு ஆதரவு அளிப்பேன் என, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போதே தொடங்கி விட்டது எனக் கூறலாம். ஆட்சியை தக்க வைக்க வேண்டும் … Read more