துணை ஜனாதிபதி தேர்தல் : பாஜக வேட்பாளர் ஜெகதீப் தங்கருக்கு அதிமுக முழு ஆதரவு : ஓ பன்னீர் செல்வம் ட்வீட்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன்  முடிகிறது. இதையொட்டி, புதிய துணை ஜனாதிபதிக்கான  தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது.  இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில்  துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவை நிறுத்த முடிவு … Read more

உத்தவ் தாக்கரே அணியினர் தாக்கல் செய்த மனு – உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரணை

ஷிண்டே அரசு சட்டசபையில் வெற்றி பெற்றது, தகுதிநீக்க நோட்டீஸ் போன்றவை சட்டவிரோதம் என்று கூறி உத்தவ் தாக்கரே அணியினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வரும் 20ஆம் தேதி அன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. சிவசேனா அதிருப்தி அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தார். அவர் கடந்த மாதம் 30ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்தநிலையில் கடந்த 3-ஆம் தேதி சட்டசபையில் புதிய சபாநாயகர் தேர்தல் … Read more

மீண்டும் ‘கப்பர் சிங் டேக்ஸ்’- இது பாஜகவின் மாஸ்டர் கிளாஸ்: ராகுல் காந்தி கடும் சாடல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை அழித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு … Read more

President Election: ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி வாக்களித்தார்

குடியரசுத் தலைவர் தேர்தலில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இன்று நடைபெற்று வருகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் … Read more

சிசிடிவி கேமரா உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்கும் டெல்லி அரசு

டெல்லியில், சிசிடிவி கேமரா உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,397 டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடைய உள்ள நிலையில், பேருந்துகள் எப்போது பேருந்து நிறுத்தத்திற்கு வரும், அதன் பயண நேரம், சேருமிடம் உள்பட பல தகவல்களை டிஜிட்டல் திரையில் பயணிகள் அறியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அவசரகால பொத்தான் (Panic button), சிசிடிவி கேமரா உள்பட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார்..!!

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

கட்டுக்கடங்காமல் செல்லும் மக்கள் போராட்டம் – இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், அங்கு மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியதை அடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருகட்டமாக, அதிபர் மாளிகை சூறையாடப்பட்டது. இதையடுத்து, உயிருக்கு பயந்து கோட்டாபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோடினார். அதன் பிறகு தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடியே, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த அவர், இடைக்கால அதிபராக ரணில் விக்ரசிங்கவை நியமித்தார். அதன்படி, ரணில் … Read more

பிஹார் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது மோடியை கொல்ல சதி: பிஎப்ஐ உறுப்பினர் உத்தர பிரதேசத்தில் கைது

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் பயணத்தில், அவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உறுப்பினர் உத்தர பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். பிஹார் சட்டப்பேரவை நூற் றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பாட்னாவில் பயணம் மேற்கொண்டார். அப் போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பாட்னாவைச் சேர்ந்த அத்தர் பர்வேஸ், முகமது ஜலா லுதீன் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் தங்கியிருந்த … Read more

மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முதல் நாளிலேயே முடங்கிய மக்களவை, மாநிலங்களவை

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. 14 நாட்கள் நடைபெறும் கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசும், அக்னிபாத், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மாநிலங்களவையில் எதிர்க்கட்சி … Read more

தேசிய பங்குச்சந்தைக்கு புது சிஇஓ – நிர்வாக இயக்குநர் நியமனம்! யார் இந்த ஆஷிஷ் குமார்?

தேசிய பங்குச்சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் குமார் சவுகான் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஆஷிஷ் குமார் சவுகான், தற்போது பிஎஸ்இயின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக இவர் பிஎஸ்இயின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இவரது பதவி காலம் வரும் நவம்பரில் முடிவடைகிறது. ஏற்கெனவே பத்தாண்டுகள் பதவியில் இருந்திருப்பதால் மீண்டும் மறுநியமனம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் என்.எஸ்.இ.க்கு விண்ணப்பித்தார். என்.எஸ்.இயின் நிர்வாக இயக்குநர் விக்ரம் லிம்யேயின் பதவி காலம் ஜூலை 16-ம் தேதியுடன் … Read more