குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்பு வகைகள், தயிர், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்த வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வீட்டு வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், ‘அன்றாட உணவு … Read more

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையில் தீவிர கண்காணிப்பு – எல்லை பாதுகாப்பு படை தொடங்கியது

ஜைசல்மர்: நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், ராஜஸ்தான் உட்பட பாகிஸ்தானின் மேற்கு எல்லைப் பகுதி முழுவதும் ‘ஆப்ரேஷன் அலர்ட்’ என்ற பெயரில் தீவிர கண்காணிப்பு பணியை எல்லை பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செயலில் ஈடுபடலாம் என்பதால், நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு திசையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ‘ஆப்ரேஷன் அல்ர்ட்’ என்ற … Read more

முகப்பு படத்தை மாற்றிய ஆர்.எஸ்.எஸ்.: தேசியக் கொடியுடன் என்ன சர்ச்சை?

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி … Read more

ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களை கைது செய்த சிபிஐ டிஎஸ்பி-யை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி? டிரைவர் பலி

கோரக்பூர்: ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களை கைது செய்த சிபிஐ டிஎஸ்பி-யை உத்தரபிரதேசத்தில் லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவத்தில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் பலியானார். உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் சிபிஐ டிஎஸ்பி ரூபேஷ் குமார் வஸ்தவா, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இருந்து கோரக்பூருக்கு தனது டிரைவருடன் காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிஎஸ்பி ரூபேஷ் குமார் வஸ்தவா … Read more

பிரியங்காவைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் மீண்டும் கரோனா தொற்று

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஜூன் 2 ஆம் தேதி சோனியா காந்திக்கு முதன்முதலில் கரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவர் ஆரம்பத்தில் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். சில தினங்களுக்குப் பின்னர் ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் … Read more

உரிமை கோராத ரூ.39 ஆயிரம் கோடி; ஒன்றிய அரசு, ஆர்பிஐ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: வங்கி கணக்குகள், காப்பீடுதாரர்களின் உரிமை கோரப்படாத சுமார் ரூ.39 ஆயிரம் கோடி தொடர்பாக ஆன்லைன் தகவல் தளத்தை உருவாக்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் சுசிதா தலால் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்குகள், எல்ஐசி காப்பீடுகளில் 10 ஆண்டாக உரிமை கோரப்படாத டெபாசிட் பணம், டெபாசிட்தாரர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியாக … Read more

75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வீட்டில் தேசிய கொடி ஏற்றிய பிரபலங்கள்

டெல்லி: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று  அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் தேசிய கொடியை ஏற்றினர். இந்தியாவின், 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட, நாடு முழவுதும் தயாராகிவருகிறது. அமுத பெருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ‘வீடுகள் தோறும் மூவர்ணம்’ என்ற பிரதமர் நரேந்திர மோடி வலிறுத்தினார். அதை செயல்படுத்தும்படி, மாநிலங்களுக்கும் அழைப்பு விடுத்தார். … Read more

சுதந்திர தினத்தன்று பெங்களூருவில் அரசுப் பேருந்துகளில் மக்கள் இலவசமாக பயணிக்கலாம்

பெங்களூரு: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் 25-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து ஊழியர்கள், பொதுமக்களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை விபத்தை ஏற்படுத்தாத ஓட்டுநர், பணியில் சிறப்பாக செயல்பட்ட நடத்துநர் உள்ளிட்ட … Read more

சுதந்திரம் கிடைத்த போது மகாத்மா காந்தி எங்கிருந்தார்?

இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை வருகிற 15 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. அந்த நள்ளிரவில், பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து அதிகார … Read more

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால்… – நிதியமைச்சகம் அளித்த புது விளக்கம்!

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குடியிருப்பை தனிநபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடும் பட்சத்தில் அதற்கு ஜிஎஸ்டி கிடையாது என அரசு விளக்கம் அளித்துள்ளது. வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் பரவிய நிலையில் இவ்விளக்கத்தை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நோக்கத்திற்கு குடியிருப்பை வாடகைக்கு விட்டால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்றும் அரசு தெரிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM