புதுச்சேரியில் அனைத்து சமூக நல அமைப்பினர் கடும் எதிர்ப்பு: தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை அமைப்பதா?

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக வந்த சமூக அமைப்பினர் சாவர்க்கர் உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தியாக பெருஞ்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை எதிரே தியாக பெருஞ்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுதந்திர போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் … Read more

'ரூ.20 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு'.. பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா மீது குவியும் நெருக்கடி

பார்த்தா சாட்டர்ஜியும் அர்பிதா முகர்ஜியும் சேர்ந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. பார்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர். அர்பிதா முகர்ஜியின் … Read more

கிரேன் கம்பி அறுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கிரேன் கம்பி அறுந்ததில் 5 தொழிலாளர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பாலமூரு பகுதியில் நீரேற்று பாசனத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ராட்சத கிரேன் மூலம் பம்ப் ஹவுஸ் பகுதிக்குள் தொழிலாளர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கிரேன் கம்பி திடீரென அறுந்ததில் 6 தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். இதில் 5 பேர் அதே … Read more

துப்பாக்கி மலை: ஆப்பரேஷன் விஜய் வீரர்களுக்கு கவுரவம்!

இந்தியாவுக்குள் கடந்த 1999ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள் கார்கில் பகுதியை முற்றுகையிட்டன. கார்கில் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள கக்சார், ஹர்ட்ராஸ், திராஸ், படாலிக் போன்ற பகுதிகளையும் பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பாகிஸ்தான் பிடியிலிருந்து கார்கிலை மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கார்கில் போர் நடத்தப்பட்டது. இந்த போருக்கு ஆப்பரேஷன் விஜய் என பெயரிடப்பட்டது. உயரமான மலைப் பகுதியில் சுமார் 60 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்து, … Read more

ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை அடித்து உதைத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

ஜபல்பூர்: மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை இரக்கமில்லாமல் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சுமார் 30 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், எழுந்திருக்க முயற்சிக்கும் முதியவரை மீண்டும் மீண்டும் அந்த போலீஸ்காரர் உதைத்து தள்ளுகிறார். மேலும் அந்த முதியவரின் கால்களைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்று தண்டவாளத்தில் கீழே தொங்கவிட்டபடி, முகத்திலும் தொடர்ந்து உதைத்து தாக்குதல் நடத்துகிறார். இந்த வீடியோவை ரயில் பயணி ஒருவர் வீடியோவாக … Read more

ஆசியாவின் பணக்கார பெண் ஆனார் சாவித்ரி ஜிண்டால் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். முன்னதாக, இந்த குழுமத்தின் தலைவராக இருந்த இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார். அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார். இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவராக உயர்ந்த இவரது சொத்து … Read more

எல்லையில் சீன கட்டுமானத்தால் பூடான் விரைந்தார் ராணுவ தளபதி

திம்பு: டோக்லாம் பள்ளத்தாக்கின் கிழக்கே பூடான் எல்லையில் சீனா ஒரு கிராமத்தை கட்டமைத்து வருவது தொடர்பான புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. இந்தப் பகுதி இந்தியாவுக்கு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பூடானில் தனது 2 நாள் பயணத்தை நேற்று தொடங்கினார். தலைநகர் திம்புவில் பூடானின் 3-வது மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக் நினைவாக தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் அஞ்சலி செலுத்துகிறார். மனோஜ் பாண்டே தனது … Read more

நடிகை பலாத்கார வழக்கில் திடீர் பரபரப்பு; என்னை சிக்க வைத்தது நடிகை மஞ்சு வாரியர்.! நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் தன்னுடைய முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியர் தான் தன்னை சிக்க வைத்தார் என்று உச்ச நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது திலீப் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கில் கொச்சி குற்றப் பிரிவு போலீசார் … Read more

குஜராத்திகள் வெளியேறிவிட்டால் மகாராஷ்டிராவில் பணம் இருக்காது – சர்ச்சையை கிளப்பிய ஆளுநர்!

குஜராத்திகள், ராஜஸ்தானியர்கள் மும்பை மற்றும் தானேவை விட்டு வெளியேறினால், மகாராஷ்டிராவில் பணம் இருக்காது என்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான அந்தேரியில் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, “மகாராஷ்டிராவில் இருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானேயில் இருந்து, குஜராத்திகள் மற்றும் ராஜஸ்தானியர்களை அகற்றினால், உங்களிடம் பணம் இருக்காது, மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக இருக்காது என்று … Read more

மங்களூருவில் 3 நாளில் 2 பேர் படுகொலை – என்ஐஏ விசாரணைக்கு பசவராஜ் பொம்மை பரிந்துரை

பெங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவில் 3 நாட்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொலை வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த 26-ம் தேதி மங்களூரு அருகேயுள்ள பெல்லாரேவை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்த ஃபாசில் (23), சூரத்கலில் மர்ம நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் … Read more