மழைநீரில் கால் நனைந்துவிடாது என்பதற்காக மாணவர்கள் போட்ட நாற்காலிகள் மீது ஏறி சென்ற ஆசிரியை..!

உத்தரபிரதேசத்தில் மழைநீரில் கால் நனைந்துவிடாது என்பதற்காக மாணவர்களை நாற்காலிகளை போட வைத்து அதன் மீது ஏறி சென்ற ஆசிரியை பணிடைநீக்கம் செய்யப்பட்டார். மதுரா மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு பணிக்கு வந்த ஆசிரியை, தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்ல விருப்பமில்லாமல் இந்த செயலை செய்துள்ளார். மேலும், நாற்காலிகள் சரிந்துவிடாது என்பதற்காக மாணவர்களை பிடித்துக் கொள்ளுமாறும் கூறிய ஆசிரியையின் வீடியோ வெளியானதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  Source link

உத்தரகாண்டில் பரபரப்பு!: சத்தமாக அழுது விநோதமாக நடந்துகொள்ளும் பள்ளி மாணவிகள்..அச்சத்தில் ஆசிரியர்கள்..!!

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வரில் உள்ள அரசுப்பள்ளி மாணவிகள் சத்தமாக அலறி அழுவதும், தலையை குனிந்துகொண்டு முறைப்பதும் என வித்யாசமாக நடந்துகொள்வது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகேஸ்வரில் உள்ள அரசுப்பள்ளியை சேர்ந்த ஒரு சில மாணவிகள் முதலில் வித்யாசமாக நடந்துகொண்ட நிலையில், மாணவிகளின் நடவடிக்கை குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு பூசாரியை அழைத்து வந்து பூஜைகள் செய்த போது நிலைமை கட்டுக்குள் வந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை கூறியுள்ளார். ஆனால் தற்போது அதிக அளவிலான … Read more

வயதுக்கு மரியாதை இல்லையா? முதியவரை காலால் எட்டி உதைத்த போலீஸ் -வெளியான அதிர்ச்சி வீடியோ

மத்தியப் பிரதேசத்தில் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவரை காவலர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை இரக்கமில்லாமல் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சுமார் 30 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், எழுந்திருக்க முயற்சிக்கும் முதியவரை மீண்டும் மீண்டும் உதைத்து தள்ளுகிறார் அந்த காவலர். மேலும் அந்த முதியவரின் கால்களைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்று தண்டவாளத்தில் கீழே தொங்கவிட்டபடி … Read more

"விலைவாசி உயர்வு எதிரொலி" – விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதம்..!

திங்கள்கிழமை மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெறுகின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – கோவிட் போருக்குப் பிறகு மீண்டும் நடவடிக்கைக்கு பதிலளிப்பார் என்றும். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு வாரங்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டிலும் பெரும் குழப்பம் நிலவியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் பணவீக்கம் மீதான விவாதத்தை மற்ற அனைத்து அலுவல்களையும் நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இந்தியாவின் வருடாந்திர சில்லறை … Read more

தெலுங்கானாவில் கிரேனில் இரும்பு சங்கிலி அறுந்து விபத்து: 5 கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்…!

தெலுங்கானா: தெலுங்கானாவில் பலபொரு ரங்காரெட்டி திட்டத்தில் நீர் ஏற்றும் பணி நடக்கும் போது 100 அடி ஆழ சுரங்கத்திலிருந்து கிரேன் மூலம் தொழிலாளர்கள் மேலே வந்த போது இரும்பு சங்கிலி அறுந்து விழுந்ததில் 5 கூலி தொழிலாளிகள் உயிரிழந்து இருக்கிறார்கள். தெலுங்கானா மாநில அரசு சார்பில் நகக்கண்ணில், மல்குபென்னகர், நாராயணப்பேட்டை, விக்ரபாத், ரங்காரெட்டி, நல்கொண்ட மாவட்டங்களில் உள்ள மலை பகுதிகளில் பாசன வசதி உருவாக்குவதற்காக 12 லட்சம் ஏக்கருக்கு விவசாயத்திற்கு பயன்படும் விதமாகவும், கிராமங்களின் குடிநீர் தேவையை … Read more

மோடியுடன் பாஜக நிர்வாகிகளின் நீண்ட நேர சந்திப்புக்கு என்ன காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பேசியது என்ன? சுவாரஸ்யமான தகவல்கள் – உங்களுக்காக இதோ. இரண்டு நாள் பயணமாக, சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றார். அதை முடித்துக் கொண்டு இரவு 8.40 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்த பிரதமர் இரவு அங்கேயே தங்குவதற்கான திட்டமிடல்கள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் வருவதற்கு முன்பாகவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில மையக்குழு என்ற உச்சபட்ச அதிகாரம் மற்றும் … Read more

குஜராத்தில் போதை மாஃபியாவை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது? – ராகுல் கேள்வி

புதுடெல்லி: குஜராத்தில் போதைப் பொருள் மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ரோஜிட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச் சாராயம் குடித்த பலருக்கு மறுநாள் அதிகாலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விஷச் சாராயத்துக்கு 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

கொரோனா சிறப்பு முகாமில் ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி; மத்திய பிரதேச நர்சிங் மாணவர் கைது

சாகர்: மத்திய பிரதேசத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட நர்சிங் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் சாகரில் செயல்படும் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில், அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் பள்ளி, மாணவ மாணவியருக்கு தடுப்பூசி போட்டனர். 15 வயதுக்கு மேற்பட்ட ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம்  வகுப்பு வரை உள்ள … Read more

உ.பி: மாணவர்கள் அமைத்த நாற்காலி பாலத்தில் மழைநீர் படாமல் சொகுசாக சென்ற ஆசிரியை சஸ்பெண்ட்!

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட அரசுப்பள்ளியில், மாணவர்கள் அமைத்த நாற்காலி பாலத்தில் சொகுசாக நடந்து வந்த ஆசிரியை வீடியோ வைரலானதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் பல்தேவ் கிராம பஞ்சாயத்து தகெட்டாவில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளி கனமழை காரணமாக வெள்ளத்தால் முழுவதுமாக சூழப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி செயல்படத் துவங்கிய நிலையில், மாணவர்கள் தேங்கிய மழைநீரில் நடந்து வகுப்பறையை அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை, மாணவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை கொண்டு அமைத்த … Read more

“சென்னை நினைவுகள்… மறக்கமுடியாத பயணத்திற்கு நன்றி” – பிரதமர் மோடி வெளியிட்ட சுவாரஸ்ய வீடியோ

சென்னை: இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு சென்ற பிரதமர், அங்கிருந்து கார் மூலம் தொடக்க விழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை … Read more