ஸ்மிருதி இரானி மகள் குறித்த பதிவுகளை நீக்க காங். தலைவர்களுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரது மகள் குறித்த அவதூறான சமூகவலைதளப் பதிவுகளை காங்கிரஸ் தலைவர்கள் மூவரும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன் மீதும், தனது மகள் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நேட்டா டிசோஷா ஆகியோர் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியிருக்கின்றனர் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக நஷ்டஈடு தர வேண்டும் என்றும் … Read more

அமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – என்ன நடந்தது தெரியுமா ..?

ஜூலை 24 அன்று நடந்த தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளத் தவறியதற்காக, தெலுங்கானாவில் உள்ள மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள பெல்லம்பள்ளி முனிசிபல் கவுன்சில் ஆணையர், நான்கு அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு மெமோ ஒன்றை வழங்கியுள்ளார். அறிவிப்பைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி ஆணையர் கோபு கங்காதர் வெளியிட்டுள்ள குறிப்பில், “மேற்கண்ட குறிப்புடன், மாண்புமிகு நகராட்சி அமைச்சர் கே. தாரக ராமராவ் பிறந்தநாள் விழா 24.07.2022 … Read more

அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரிகள் உற்பத்தியில் களமிறங்கும் மூன்று நிறுவனங்கள்..!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரமான அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரிகளை உற்பத்தி செய்யவும், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி, ஓலா எல்க்ட்ரிக் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்கள் களம் இறங்குகின்றன. இதன்படி, மேம்பட்ட வேதியியல் சேமிப்பு செல் பேட்டரிகளை தயாரிக்கும் தொழிலில் இந்த நிறுவனங்கள் ஈடுபடும். தரமான அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரி … Read more

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி

டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி மன்னிப்பு கோரினார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்த ஆதிர் ரஞ்சனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மன்னிப்பு கோரினார்.

மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு இணைய வாய்ப்பு உள்ளதா? சிரித்தபடி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், 3 வாரத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க அறிவுறுத்தியுள்ளது. இவ்வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிரித்தபடி கேள்வி எழுப்பினர். ஈபிஎஸ் தரப்பு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இதை எதிர்த்து ஓபிஎஸ் … Read more

குருகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளை கடத்தியவர்கள் கைது

சண்டிகர்: ஹரியானாவில் கால்நடைக்கடத்தலில் ஈடுப்பட்ட லாரியை காவல் துறையினர் சினிமா பானியில் துரத்திச் சென்று மடக்கி 4 பேரை கைது செய்தனர். குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துரத்தல் காட்சி சினிமா படப்பிடிப்பை மிஞ்சும் வகையில் இருந்தது. சோதனைச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற லாரியில் பசுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கடத்தப்படுவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து ஜீப்பில் காவல் துறையினர் துரத்தி சென்றனர். கொட்டும் மழையிலும் லாரியை நிறுத்தாமல் கடத்தல்காரர்கள் வேகம் எடுத்ததால் லாரி டயரை துப்பாக்கியால் … Read more

39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசி – நர்சிங் மாணவர் கைது

மத்தியப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் 39 பேருக்கு ஒரே ஊசியை பயன்படுத்திய நர்சிங் மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஜெயின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு தனியார் நர்சிங் கல்லூரி மாணவரான ஜிதேந்திர அஹிவார் என்பவரை மாவட்ட சுகாதார அலுவலகம் நியமித்திருந்தது. அந்த நபரோ, ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மாற்றாமலேயே மற்ற மாணவர்களுக்கும் அதனை பயன்படுத்தி வந்தார். … Read more

காந்தி, வல்லபாய் படேல் பிறந்த மண்ணில் போதைப்பொருள் வியாபாரம்!: மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன?.. ராகுல் காந்தி கேள்வி..!!

டெல்லி: போதைப் பொருள் மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன? என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த பலர் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி கொத்துக்கொத்தாக உயிரிழந்தனா். மேலும் 97 பேர் பாவ்நகா், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, பா்வாலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் … Read more

சினிமா பாணியில் ஒரு சேஸிங்! கால்நடைகளை கடத்திய லாரியை மடக்கி பிடித்த போலீஸ்!

ஹரியானாவில் கால்நடை கடத்தலில் ஈடுபட்ட லாரியை காவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கி 4 பேரைக் கைது செய்தனர். குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துரத்தல் காட்சி, சினிமா படப்பிடிப்பை விஞ்சும் வகையில் இருந்தது. சோதனைச் சாவடியில் நிறுத்தாமல் சென்ற லாரியில் பசுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கடத்தப்படுவது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ஜீப்பில் காவல்துறையினர் துரத்திச் சென்றனர். கொட்டும் மழையிலும் லாரியை நிறுத்தாமல் கடத்தல்காரர்கள் வேகமெடுத்ததால், லாரி டயரை துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, வாகனங்கள் … Read more

கதறி துடித்து தரையில் உருண்ட பள்ளி மாணவிகள்… புதுவித மன நோயால் பாதிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் பாகேஷ்வரில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் மாணவிகள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வகுப்பை விட்டு வெளியேறி கத்தி கூச்சலிட்டுள்ளனர். பின்னர், அனைவரும் புலம்பியவாறு தங்களது தலை முடியை கலைத்துக்கொண்டு தரையில் உருண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியைகள் மாணவிகளை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், மாணவிகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பின்னர் பள்ளிக்கு வந்த மருத்துவ குழு மாணவிகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு “மாஸ் ஹிஸ்டீரியா” என்ற … Read more