பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!
பாட்னா: குடியரசு துணை தலைவர் பதவி கனவு நிறைவேறாததால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் விமர்சனம் நகைப்புக்குறியது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாரதிய ஜனதா உடனான உறவு முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் ஆர்.ஜே.டி.யின் மகா கூட்டணியில் இணைந்து 8வது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே, நிதிஷ்குமாரின் விலகல் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட நிதிஷ்குமார் விரும்பியதாக தெரிவித்தார். … Read more