குடியரசு தலைவரின் மனம் புண்பட்டு இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் : காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

புதுடெல்லி : குடியரசு தலைவரின் மனம் புண்பட்டு இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் என்று மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் சவுத்ரி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, ‘ராஷ்டிரபதி என்பதற்கு பதிலாக ராஷ்டிரபத்தினி’ என்று கூறினார். இது தனிப்பட்ட பெண்ணின் பாலினத்தை மிக பெரிய அளவில் விமர்சிக்கும் வார்த்தை என கூறி பாஜவினர், காங்கிரஸ் … Read more

கணவருடன் கடலுக்கு சென்று காதலருடன் மாயமான மனைவி: மீட்பு பணியால் நொந்துப்போன போலீஸ்!

திருமண நாளை கொண்டாட கணவருடன் கடற்கரைக்கு சென்ற மனைவி கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக எண்ணி தீவிர தேடலில் ஈடுபட்டு வந்த நிலையில், இறுதியில் வெளியான தகவல் போலீசாரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள ஃபார்மா கம்பெனியில் பணியாற்றி வருபவர் ஸ்ரீநிவாஸ். இவருக்கும், 20 வயதை கடந்த சாய் ப்ரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி திருமணமாகியிருக்கிறது. இப்படி இருக்கையில் தங்களுடைய இரண்டாமாண்டு திருமணநாளை கொண்டாடுவதற்காக ஸ்ரீநிவாஸும், சாய் ப்ரியாவும் விசாகப்பட்டினத்தில் உள்ள … Read more

கர்நாடகா | பாஜக மாவட்ட செயலாளர் உயிரிழப்பு – அரசின் ஆண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்தார் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பிரவீன் நெட்டூரு மர்ம நபர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் சுள்ளியா அருகேயுள்ள பெல்லாரேவை சேர்ந்தவர் பிரவீன் நெட்டூரு (28). இவர் அந்த மாவட்டத்தின் பாஜக இளைஞர் அணி செயலாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பிரவீன் பெல்லாரே கடைவீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 இரு … Read more

குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

டெல்லி: குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை, ‘ராஷ்ட்ரபத்னி’ என தவறுதலாக கூறிவிட்டேன் என  காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள்: சோனியாகாந்தியை ஏன் இதில் இழுக்க வேண்டும்? குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்க தயார் எனவும் கூறினார்.

30 மாணவர்களுக்கும் ஒரே ஊசி – அலட்சியமாக பதிலளித்த மருத்துவ அலுவலர்! போலீஸ் வழக்கு பதிவு

மத்திய பிரதேசத்தில் 30 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஒரு ஊசியை பயன்படுத்தி கொரோனா மருந்தை செலுத்திய சுகாதார அலுவலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் ஜெயின் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இன்று காலை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சுகாதார அலுவலர் ஒருவர் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். ஆனால் ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மாற்றாமல் மற்ற மாணவர்களுக்கும் அவர் பயன்படுத்தி வந்தார். இதனை … Read more

மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு – கேரள மாநில பேராயரிடம் விசாரணை

திருவனந்தபுரம்: மாணவர் சேர்க்கையில் அதிக அளவு பணம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கேரள பேராயர் தர்மராஜ ரசலத்திடம் விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பேராயர் ஏ.தர்மராஜ ரசலம் … Read more

சீனா ஏவிய ராக்கெட்டின் சிதைவுகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விழக் கூடும் எனத் தகவல்!

சீனா அண்மையில் ஏவிய பூஸ்டர் ராக்கெட்டின் சிதைவுகள் அடுத்த சில நாட்களில் புவியின் பல பகுதிகளில் விழக்கூடும் என விண்வெளி நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சீனா ஜூலை 24ஆம் நாள் லாங்மார்ச் 5பி என்னும் ராக்கெட் மூலம் விண்வெளி ஓடத்தைச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. 23 டன் எடை கொண்ட பூஸ்டர் ராக்கெட் விண்வெளி முகமையின் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில், ஜூலை 31ஆம் நாள் வாக்கில் இதன் சிதைவுகள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் மக்கள் … Read more

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ‘கிரீன் கோ’ எரிசக்தி மின் திட்டம் அல்ட்ரா மெகா சோலார் பூங்கா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆய்வு

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் ‘கிரீன் கோ’ எரிசக்தி மின் திட்டம், அல்ட்ரா மெகா சோலார் பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி சித்தார்த் கவுஷல் ஆய்வு செய்தார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஓர்வக்கல்லு அடுத்த கும்மிதம்தாண்டா கிராமத்தில்  ‘கிரீன் கோ’ ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம்  அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சகுனாலா கிராமத்தில் கிரீன் கோ கனி அல்ட்ரா மெகா சோலார் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. … Read more

குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி – அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த வாரம் பயணம்

குஜராத் மாநில பொதுத்தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில்  வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அங்கு பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி குறிவைத்துள்ள மாநிலங்களில் முக்கியமானது குஜராத். அம்மாநில பொதுத்தேர்தல் இந்த வருட இறுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலில் கணிசமான வெற்றிகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி,  குஜராத் மாநிலத்தின் … Read more

கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்: பார்த்தா சாட்டர்ஜி குறித்து திரிணமூல் செய்தித் தொடர்பாளர் கருத்து

கொல்கத்தா: கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று பார்த்தா சாட்டார்ஜி குறித்து திரிணமூல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, … Read more