'சிங்கப்பூருக்கு போக அனுமதி கொடுங்க' – பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்!
சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். சிங்கப்பூர் நாட்டில் இம்மாத இறுதியில், உலக நகரங்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து இருந்தார். … Read more