“எஸ்பிஐ தங்க நகைக்கடன்கள் மதிப்பு ரூ.1 இலட்சம் கோடியைத் தாண்டியது” – தலைவர் தினேஷ் காரா

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க நகைக் கடன்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் தங்க நகைக் கடன்கள் வழங்குவது குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தங்க நகைக் கடன்களில் 24 விழுக்காட்டை பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Source link

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தடை விதிக்க கோரிய சிவசேனா கூட்டணியின் கோரிக்கை நிராகரிப்பு; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிரா சட்டப் ேபரவை கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கக் கோரியும், அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். … Read more

இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு – தங்கம் விலை உயரப்போகிறது?

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் விலை மேலும் உயரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிகரிக்கும் இறக்குமதியால் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு குறையும் சூழல் உருவாவதை தடுக்க, மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவற்காக, சுங்க வரி தற்போது 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியும் நிலையில், இறக்குமதி வரி அதிகரிப்பினால் … Read more

பஞ்சாப் : இன்று முதல் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

பஞ்சாபில் இன்று முதல் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் மான் சிங் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின் போது, வெற்றி பெற்றால் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. தனிப்பெரும்பான்மையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டுவிட்டரில் இதை பதிவிட்டுள்ள முதலமைச்சர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். Source link

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: இருதரப்பு வர்த்தகம், உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா- உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு, தற்போது மீண்டும் ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார். குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோது, இந்தியாவிற்கும்-ரஷ்யாவிற்கும் இடையில் பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. … Read more

பிளாஸ்டிக்கை ஒழிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நார்வே, டென்மார்க் பாராட்டு – பிரதமருக்கு புகழாரம்..!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கும் இந்தியாவின் நடவடிக்கையை, நார்வேயும், டென்மார்க்கும் பாராட்டியுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும், மிக முக்கியமான நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளதாகவும் நார்வே புகழாரம் சூட்டியுள்ளது. இதேபோல்,டெல்லியில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ஃப்ரெட்டி ஸ்வானே, இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகசிறப்பானது என்றும் பூமிக்கு இந்தியா அளிக்கும் பரிசு என்றும் பாராட்டியுள்ளார். Source link

மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய சிவசேனா

டெல்லி: மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டபேரவைக்குள் நுழைய விதிக்கக் கோரி, மகா விகாஸ் கூட்டணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஜூலை 12ம் தேதி வரை அவகாசம் அளித்ததை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அதிருப்தி முகாமின் … Read more

சட்டவிரோத பண பரிமாற்றம் : அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவர் கைது..!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் உள்ள சத்யேந்தர் ஜெயின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் வர்த்தக கூட்டாளிகளான அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயினை, அமலாக்க துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். Source link

மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். பத்ரா சாவல் நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் இன்று மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்த நாள் முதல் பாரதிய ஜனதா தொல்லை கொடுத்து வந்தது. அதேபோல நாங்கள் தற்போது அமைந்துள்ள ஷிண்டே தலைமையிலான … Read more

மணிப்பூர் நிலச்சரிவு – ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு; தேடும் பணி தீவிரம்

மணிப்பூர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்காட்டி வருகின்றனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்திலுள்ள துபுல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் கடந்த புதன்கிழமை இரவு அன்று இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் டெரிடோரியல் ராணுவ … Read more