தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது ஒன்றிய அரசு..!!
டெல்லி: தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் அதன் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2021 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மே மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 9 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா தன்னுடைய தேவைகளை இறக்குமதி மூலமே நிறைவேற்றி கொள்கிறது. தங்கத்தை இறக்குமதி செய்வதில் உலகத்திலேயே 2வது பெரிய நாடு இந்தியா. … Read more