மறைந்த தந்தையின் மெழுகுச் சிலையை தங்கைக்கு பரிசாக வழங்கிய அண்ணன்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவுல சுப்ரமணியம். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஃபனி குமார் என்ற மகனும் சாய் வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சுப்ரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மரணம் குடும்பத்தினரை மிகவும் பாதித்தது. இந்நிலையில் சாய் வைஷ்ணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் மறைந்த தனது தந்தையின் மெழுகுச் சிலையை தங்கைக்கு திருமணப் … Read more