சோதனையின் போது மோதல்.. இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

பஞ்சாப் மாநிலத்தின் தேரா பஸ்ஸியில் சோதனை மேற்கொள்ள முயன்ற போது ஏற்பட்ட மோதலில், இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஹெபத்பூர் சாலையில் நின்றிருந்த கணவன் மனைவியை போலீசார் சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த போலீசார் தன் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட மோதலில் தனது சகோதரரை காவல் உதவி ஆய்வாளர் சுட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். அதேநேரம், கணவன் மனைவியை விசாரிக்கும் … Read more

கவலை எதுக்கு… கிரெடிட் கார்டு இருக்கு… ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் கிரெடிட் கார்டை உரசிய மக்கள்; பரிவர்த்தனையில் புது உச்சம்

மும்பை: கடந்த மே மாதத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக, கிரெடிட் கார்டு மூலம் ரூ.1.1 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனை நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்துக்கான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில், ‘கடந்த மே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,14,000 கோடி அளவுக்கு பரிவர்த்தனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 8 சதவீதமும், கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 118 … Read more

அசாமில் வெள்ளத்தில் மூழ்கிய காவல் நிலையம்..!

அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பங்னாமரி காவல் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரம் இருந்த காவல் நிலையத்தின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து அதன் ஒரு பகுதி நீரில் மூழ்கும் வீடியோ வெளியாகி உள்ளது. Source link

கேரளாவில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கேரளாவில் தினசரி நோயாளிகள்  எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், தற்போது கேரளாவில் மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பொது இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்பட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், … Read more

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு பரிசளித்த பிரதமர் மோடி..

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய கலாச்சாரம், பாரபர்யத்தை பிரதிபலிக்கும் பரிசுப்பொருட்களை வழங்கினார். வாரணாசியில் வடிவமைக்கப்பட்ட குலாபி மீனாகரி அணிலன்களை அமெரிக்க அதிபர் பைடனுக்கும், கையால் வரையப்பட்ட பிளாட்டினம் வர்ணம் பூசிய தேநீர் குடுவையை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் பரிசளித்தார். Source link

ஆட்சியை கவிழ்க்கலாம்.! ஆட்சியை அமைக்கலாம்.! அ முதல் ஃ வரை…இந்தியாவை ஆட்டிப்படைக்கும் சொகுசு விடுதி அரசியல்

உலகத்திலேயே எங்குமே இல்லாத ஒரு அரசியல் பார்முலா, நம் நாட்டில் மட்டும்தான் உள்ளது. இது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல. அதாவது, எந்த நாட்டிலும், மக்கள் பிரதிநிதிகள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படுவதாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஆட்சியை காப்பாற்றவும், ஆட்சியை கவிழ்க்கவும் என இரு விஷயத்திற்கும் சொந்த கட்சி எம்எல்ஏக்கள் சிறைக் கைதிகளாக ஒரே இடத்தில் அடைக்கப்படுகிறார்கள். இந்த அரசியல் பார்முலாவின் பிரம்மாஸ்திரமாக திகழ்பவைதான் சொகுசு ஓட்டல்கள், சொகுசு ரிசார்ட்டுகள். இதைத்தான் … Read more

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு

அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணலாம் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். கவுகாத்தியில் உள்ள பெரும்பாலானோர் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தன்னை தொடர்பு கொண்டதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு வந்தால் தீர்வு காணப்படும் எனவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். Source link

வரலாறு காணாத சரிவை கண்ட இந்திய ரூபாயின் மதிப்பு: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம்

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததை அடுத்து ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். யாருடைய மதிப்பு வேகமாக சரிவது என ஒன்றிய அரசுக்கும் ரூபாய்க்கும் இடையே போட்டி நடப்பதாக 2013ல் பிரதமர் மோடி விமர்சித்திருந்ததாக கூறினார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை தடுக்க பேசுவதை நிறுத்திவிட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். 

'மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது' – உதய்பூர் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: “மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது” என்று ராஜஸ்தானின் உதய்பூர் கொலை சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவளித்த உதய்பூரைச் சேர்ந்த கன்னைய்யா லால் டெலி (40), என்பவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை வைத்து நடத்தி வந்தார். இன்று மாலை இவரது … Read more

பிளாஸ்டிக் பயன்பாடு…மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்படி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (மறுசுழற்சி செய்ய இயலாத) குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, பயன்பாடு, … Read more