நடிகை பலாத்கார வழக்கு நடிகர் விஜய் பாபுவின் ஆண்மை பரிசோதனை: போலீசார் முடிவு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். மலையாள புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.  ஜூன் 27 முதல் ஜூலை 3ம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், போலீசார் கைது செய்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நிபந்தனை … Read more

ஜூலை 1 முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – முழு விவரம்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் அவைகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்து குறிப்பு: ‘ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை 2022-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கிணங்க, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை … Read more

சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதி விபத்து.. 2 பேர் பலி – ஒருவர் படுகாயம்

தெலங்கானாவில் சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் மேதக் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், கட்டுப்பாட்டு இழந்து மாணவர்கள் மீது மோதியது. டிராக்டரின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மும்பை: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி நீடிக்கிறது.

சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார்

சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார். 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சபூர்ஜி பலோன்ஜி நிறுவனத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கட்டிடம், ஓபராய் ஓட்டல் ஆகியவை எஸ்பி குழுமம் வடிவமைத்த கட்டிடங்கள்தான். டாடா குழுமத்தில் இவர் குடும்பத்துக்கு 18.2 சதவீத பங்குகள் இருக்கிறது. இந்த பங்குகள் அடிப்படையில்தான் பலோன்ஜி மிஸ்திரியின் மகன் சைரஸ் மிஸ்திரி தலைவரானார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தலைவர் பதவியில் … Read more

நூபுர் சர்மாவின் ஆதரவாளர் படுகொலையால் ராஜஸ்தானில் பதற்றம்; இரு இளைஞர்கள் ‘மிரட்டும்’ வீடியோ வைரல்

புதுடெல்லி: ராஜஸ்தானின் உதய்பூரில், நுபுர் சர்மாவிற்கு ஆதரித்து செயல்பட்டதாக தையல் தொழிலாளி பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை மாலை முதல் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது. கொலைக்குப் பின் மிரட்டல் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த மே 27-ல் தொலைகாட்சி விவாதம் ஒன்றில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறைத் தூதர் முகம்மது நபி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால், இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் … Read more

Alt News முகமது ஜுபைர் கைது; எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்!

இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து எது சரி? எது தவறு? என்பதை வெளிக்கொண்டு வருவதை ஆல்ட் நியூஸ் (Alt News) இணையதளம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்த தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இந்த சூழலில் இவர் 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிற்கு டெல்லி போலீசாரின் விசாரணைக்கு நேற்று சென்றிருந்தார். இவரை திடீரென கைது செய்தனர். ஆனால் மேற்குறிப்பிட்ட வழக்கிற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் … Read more

மும்பை அருகே கடலில் விழுந்த ஹெலிகாப்டர்: 4 பேர் உயிரிழப்பு

இந்திய எண்ணெய் கழக நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மும்பையிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான துரப்பண மேடைக்கு அருகே விபத்து நேரிட்டுள்ளது. ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உள்பட 7 பேர் இருந்த நிலையில் கடலோர பாதுகாப்புப் படை உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 4 பேர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். … Read more

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மாநிலங்களுக்கு இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் இன்று தொடங்கியது. இதில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2021, டிசம்பர் 31ம் தேதி புதுடெல்லியில் நடந்தது. பின்னர் 6 மாத இடைவெளியில் அடுத்த கூட்டம் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் பல மாநில அமைச்சர்கள் வருவதால், பாதுகாப்பு காரணமாக சண்டிகருக்கு கூட்டம் மாற்றப்பட்டது. அதன்படி … Read more

சோகம்.. முன்னாள் அமைச்சர் சிவதாச மேனன் காலமானார்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சிவதாச மேனன் இன்று காலை 11.30 மணியளவில் காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், பாலக்காடு மாவட்டச் செயலாளர் உட்பட பல பொறுப்புகளிலும் இருந்தவர் சிவதாச மேனன். 1987 முதல் 1991 வரை மின்துறை மற்றும் ஊரக … Read more