குஜராத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் ..!

குஜராத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த கும்பலை குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பல நாட்களாக போலீசாரின் கண்ணில் படாமல் பதுங்கி வாழ்ந்து வந்த கும்பல் ஒன்றை பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டனர். அந்த கும்பலை சேர்ந்த சிலர் வரும் வழியை நோட்டமிட்ட போலீசார், அந்த சாலையில் ஜேசிபி இயந்திரம் வைத்து நிறுத்தி தயாராக இருந்தனர். பர்தோலி நகரில் சுங்கச்சாவடியை கடந்து வந்த குற்றவாளிகளின் காரை சுற்றிவளைத்து கட்டைகளால் சரமாரியாக தாக்கிய … Read more

ஆந்திராவில் காரில் ரகசிய அறை அமைத்து கடத்தல் ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்-விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

திருமலை : ஆந்திர மாநிலம் விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கும்பலிடம் இருந்து 3 கார்களில் கடத்தி வரப்பட்ட ₹5.80 கோடி மதிப்புள்ள 10.77 கிலோ  தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 24ம் தேதி சென்னையில் இருந்து குண்டூர், ராஜமுந்திரிக்கு அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை மேற்கொண்டு வந்தனர்.அப்போது பொல்லப்பள்ளி சுங்கச்சாவடியில் … Read more

அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை…திறமையால் நிமிர்ந்த மாணவர்

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் முன்பே அமேசான், கூகுள், ஃபேஸ்புக் என 3 பெரிய நிறுவனங்களில் பணி நியமன ஆணையை பெற்று அசத்தியுள்ளார். கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் பிசாக் மொண்டல். இவர் அமேசான், கூகுள், ஃபேஸ்புக் என 3 பெரிய நிறுவனங்களில் பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். அமேசான், கூகுளை விட ஃபேஸ்புக் நிறுவனம் அதிக ஊதியம் … Read more

இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 78.59 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்க அழுத்தங்கள், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை வளர்ந்து வரும் சந்தை நாணயத்தின் மீது அழுத்தத்தை சேர்ப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாயின் மதிப்பு 81 ரூபாய் வரை சரியும் எனக் கூறப்படுகிறது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 3 … Read more

மின்சார சைக்கிள்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை குறைப்பு: ஹீரோ நிறுவனம் முடிவு

டெல்லி: மின் சைக்கிள்களை உருவாக்கி வரும் ஹீரோ சைக்கிளின், ஹீரோ லெக்ட்ரோ நிறுவனம், ஐந்து வகையான சைக்கிள்களின் விலையை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. மின்சார வாகனக் கொள்கையின் அடிப்படையில் டெல்லி அரசு மின்சார வாகனத்திற்கு வரிச் சலுகையும் மானியமும் வழங்கி வருகிறது. இந்தச் சலுகையைப் பெற தற்போது ஹீரோ லெக்ட்ரோ நிறுவனமும் தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, தனது ஐந்து வகையான மின்சார சைக்கிள்களின் விலையை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைக்க … Read more

ஓடும் ரயிலில் ஏற முயற்சி! தவறி விழுந்த கர்ப்பிணி- உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்!

கர்நாடகாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த கர்ப்பிணியை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அங்குள்ள தர்வாத் ரயில் நிலையத்திற்கு கைக்குழந்தையை வைத்திருந்த கணவருடன் கர்ப்பிணி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அப்போது ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்வதை அறிந்த அவர்கள் அவசரமாக ரயிலில் ஏற முயன்றனர். அப்போது கர்ப்பிணி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை பத்திரமாக மீட்டார். இதுதொடர்பான காண்போரை … Read more

எஸ்பி குரூப் ஷபூர்ஜி பலோன்ஜி காலமானார்; டாடா நிறுவன உறவால் வளர்ந்த தொழில் சாம்ராஜ்யம்

மும்பை: எஸ்பி குரூப் என்று அழைக்கப்படும் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவருமான பெரும் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார். அவருக்கு வயது 93. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இன்ஜினியரிங், கட்டுமானம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், தண்ணீர், எரிபொருள், நிதிசேவை ஆகிய பல்துறைகளில் கால்பதித்து பெரும் நிறுவனமாக இயங்கி வருகிறது. 1865ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷபூர்ஜி பலோன்ஜி … Read more

அமர்நாத் யாத்திரை வரும் யாத்ரீகர்கள் ஆதார் அடையாள அட்டை எடுத்து வர வேண்டும் என உத்தரவு.!

அமர்நாத் யாத்திரை வரும் யாத்ரீகர்கள் ஆதார் அல்லது பயோ மெட்ரிக் சரிபார்க்கப்பட்ட அடையாள அட்டை எடுத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரசித்திபெற்ற அமர்நாத் யாத்திரை, நாளை மறுநாள் தொடங்கி, ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புனித பயணம் வருவோருக்கு நாள்தோறும் Langer எனப்படும் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சோனாமார்க் பகுதியில் உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. நாள்தோறும் ஒன்றரை லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

திருவள்ளூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி மறுப்பு!: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!!

டெல்லி: திருவள்ளூரில் பாலிமர் தொழிற்பூங்காவுக்கு தந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. வயலூர், புழுதிவாக்கம் கிராமங்களில் 265 ஏக்கர் பரப்பில் தொழிற்பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது.

‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே

காங்கிரஸ் கட்சியினர் துரோகம் செய்வார்கள் என பலரும் கூறினார்கள்; ஆனால் எங்கள் சிவசேனா கட்சியினரே துரோகம் இழைத்து விட்டனர் என ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள். தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர் என்று அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே விமர்சித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வலியுறுத்தி சிவசேனாவை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர். இதனால் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிவசேனா தொண்டர்கள் மத்தியில் … Read more