ஜனநாயகத்தையும், இந்தியர்களையும் வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் : யஷ்வந்த் சின்ஹா பேட்டி

டெல்லி: ஜனநாயகத்தையும், இந்தியர்களையும் வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். புகுத்திய கட்டடம் கட்டுவதால் மட்டும் நாடாளுமன்றத்தின் கண்ணியம், மகத்துவத்தை உயர்த்த முடியாது என்றும்  யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். விதிகள் மதிக்கப்படும்போது நாடாளுமன்றத்தின் கண்ணியம் அதிகரிக்கிறது என்று டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா பேட்டியளித்துள்ளார்.

“ஸ்டாக் இல்லை” – தெலுங்கானா, கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! என்ன காரணம்?

தெலங்கானாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் கிடங்குகளில் எரிபொருள் பற்றாக்குறையால் இத்தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. பல எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்காக 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தலைநகர் ஹைதராபாத்தில் 40 சதவீத எரிபொருள் நிலையங்களில் ‘ஸ்டாக் இல்லை’ என்ற பதாகையே தொங்கவிடப்பட்டுள்ளன. இதே போல கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த 2 நாட்களாக டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், அரசு பேருந்து … Read more

இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு பெரியாற்றை நீந்தி கடந்த 70 வயது பெண்மணி..!

கேரளாவில் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு, பெரியாறு நதியை 70 வயது பெண்மணி ஒருவர் நீந்தி கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆரிஃபா என்ற அந்த பெண்மணி, நீச்சல் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். 780 மீட்டர் அகலமுள்ள பெரியாறு நதியை இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் அவர் 45 நிமிடத்தில் நீந்தி கடந்தார். நீச்சல் தெரியாமல் நதியில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நீச்சல் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு … Read more

விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது: யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

டெல்லி: விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், பாஜ  தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பிரிவை சேர்ந்த பாஜ பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறங்குகிறார். பாஜ வேட்பாளர் முர்மு, … Read more

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டீகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ சூதாட்டங்கள் ஆகியவற்றிற்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல, செயற்கை கை, கால், சுத்திகரிக்கப்படும் நீர் உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைக்க … Read more

தீஸ்தா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு நியமனம்

அகமதாபாத்: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின்பேரில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மும்பையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அவரை கைது செய்து, அகமதாபாத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு குற்றத் தடுப்பு போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு தீஸ்தா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் தீஸ்தா … Read more

அக்னிபாதை திட்டத்தில் 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்; இந்திய விமானப்படை தகவல்.! ஜூலை 5ம் தேதி கடைசி நாள்

புதுடெல்லி: முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நீடிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, பொதுப்பணி, தொழில்நுட்பம் (விமான போக்குவரத்து, வெடிபொருள் பரிசோதகர்) கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவினருக்கான முன்பதிவு ஜூலையில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல விமானப்படையில் சேருவதற்கான ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வீரர்கள் சேர்க்கை கடந்த 24ம் … Read more

"என்னை கைது செய்யுங்கள்" – அமலாக்கத்துறை சம்மனுக்கு சஞ்சய் ராவத் அதிரடி பதில்!

ஆட்சிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அமைச்சர்கள் பதவியையும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பறித்துள்ளார். மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா கட்சிக்குள் ஏற்பட்டிருக்கக்கூடிய குழப்பம் அம்மாநிலத்தில் ஆட்சியை நிலைக்குமா என்ற கேள்வியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி எழுப்ப அவருக்கு ஆதரவாக 35க்கும் அதிகமான சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் 8க்கும் மேற்பட்ட சுயச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு வழங்கினர். சூரத்தில் முகாமிட்டிருந்த இவர்கள் தற்போது அசாம் மாநிலம் … Read more

பறவை மோதியதால் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கம்

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காகவும் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் வாரணாசி சென்றார். வாரணாசியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் லக்னோவுக்கு … Read more

6 மாடி கட்டடத்தில் 2 ஆயிரம் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த தன்னார்வ அமைப்பு.. தானியம், தண்ணீர் போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் உள்ளன..!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பறவைகள் தங்குவதற்காக பிரத்யேகமாக 6 மாடிகள் கொண்ட கோபுர கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பு கட்டியுள்ள இந்த கட்டடத்தில், ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. பறவைகளுக்கு தானியம், தண்ணீர் போன்ற சிறப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டுள்ளன. Source link