ஜனாதிபதி தேர்தலுக்கு முன் வரும் 16-ம் ேததி இரவு பாஜக எம்பிக்களுக்கு ‘டின்னர்’: புதிய எம்பிக்களை இன்று மோடி சந்திக்கிறார்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து 25ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும். புதிய குடியரசு துணைத் தலைவர் ஆகஸ்ட் 11-ம் தேதி … Read more

மேம்பாலத்தின்கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளிப்பேருந்து! மாணவர்களை மக்கள் மீட்ட வீடியோ!

தெலுங்கானாவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி பேருந்தில் இருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ராம் சந்திரபூர், மச்சன்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மகபூப்நகர் நோக்கி தனியார் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்லும் போது அங்கு தேங்கியிருந்த நீரில் பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. அப்பகுதியில் மழைநீரால் சாலையில் நிரம்பியதால், சுமார் 30 மாணவர்களை ஏற்றிச் சென்ற … Read more

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ஒய்.எஸ்.விஜயம்மா : தனது மகளுக்கு துணை நிற்க போவதாக அறிவிப்பு

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கெளரவ தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஒய்.எஸ்.விஜயம்மா அறிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்று வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இரண்டுநாள் தேசிய கூட்டத்தில் பேசிய அவர், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தெலங்கானாவில் புதிதாக கட்சி துவங்கி தனியாக போராடி வரும் தனது மகளுக்கு பக்க பலமாக துணை நிற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Source link

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் திடீர் ராஜினாமா

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் தாயார் விஜயம்மா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கௌரவ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். குண்டூர் அருகே நடைபெற்ற  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநாட்டில் விஜயம்மாவின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. மகள் ஷர்மிளா தொடங்கிய தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே ராஜினாமா முடிவு என அவர் தெரிவித்தார். 

“வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அதிர்ச்சி” – ஷின்சோ அபே மறைவிற்கு மோடி இரங்கல்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாளை ஒரு நாள் நாடு முழுவதும் தூக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ‘எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபே மறைவு குறித்து அறிந்தபோது, வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அதிர்ச்சி அடைந்தேன். உலக அளவில் ஒரு சிறந்த அரசியல்வாதி, சிறந்த தலைவர், குறிப்பிடக் கூடிய வகையில் சிறந்த நிர்வாகியாகவும் … Read more

சிவசேனா கட்சியின் சின்னத்தை யாராலும் கைப்பற்ற முடியாது – உத்தவ் தாக்கரே

சிவசேனா கட்சியின் சின்னத்தை யாராலும் கைப்பற்ற முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஜூலை 11ம் தேதி உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு சிவசேனாவின் எதிர்காலத்தை மட்டுமின்றி ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளார்.  Source link

ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி..: ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்டரில் இரங்கல் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவுகளை காண்போம், ஷின்சோ அபேவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ஜப்பான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு … Read more

அதிமுகவின் தர்மர் உள்ளிட்ட 27 பேர் மாநிலங்களவை எம்பி ஆக பதவியேற்பு!

நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு உட்பட ஒன்பது மாநிலங்களில் இருந்து 57 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இன்று 27 பேர் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 4 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் … Read more

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட, 27 பேர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர், இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் … Read more

பள்ளி மாணவர்கள் மீது மரம் விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழப்பு.!

சண்டிகரில், வேரோடு மரம் முறிந்து பள்ளி மாணவர்கள் மீது விழுந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மார்க் பகுதியில் அமைந்துள்ள செக்டர் 9-ல், மதிய இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link