வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை மாநகர் – இனி வரும் நாள்களில் வானிலை எப்படி?

மும்பையில் நான்காவது நாளாக பெய்துவரும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மும்பையில் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அம்மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு … Read more

மத உணர்வைப் புண்படுத்திய குற்றச்சாட்டில் ஆல்ட் நியூஸ் நிறுவனர் சுபைர் கைது.. ஜாமீன் மனு நாளை விசாரணை..!

உத்தரப் பிரதேசக் காவல்துறை தனக்கு எதிராகப் பதிந்த வழக்கை ரத்து செய்யவும், தன்னை ஜாமீனில் விடுவிக்கவும் கோரி ஆல்ட் நியூஸ் நிறுவனர் முகமது சுபைர் தாக்கல் செய்த மனுவை வெள்ளியன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மத உணர்வைத் தூண்டுவதாகக் கூறி சீதாப்பூர் மாவட்டத்தில் பதிந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சுபைர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மத உணர்வைப் புண்படுத்தியதாகக் கூறிய வழக்கில் டெல்லி காவல்துறையினர் ஜூன் 27ஆம் … Read more

உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்ததால் கொலை செய்யப்பட்ட டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை: ராஜஸ்தான் அரசு முடிவு

உதய்பூர்: உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்தது தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முகமது நபிகள் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜ தகவல் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா கூறியதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் … Read more

தந்தை ஸ்தானத்தில் கெஜ்ரிவால்: இனிதே நடந்த பஞ்சாப் முதல்வர் திருமணம் – யார் இந்த மணப்பெண்?

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் சண்டிகரில் எளிமையான முறையில் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 48 வயதான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஏற்கனவே இந்திரப்ரீத் கவுர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு 21 வயதில் சீரத் கவுர் மான் என்ற மகளும், 17 வயதில் தில்ஷன் மான் என்ற மகனும் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஒருமித்த கருத்து … Read more

திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி

திருமலை: திருப்பதி 2வது மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டடுள்ளதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். திருப்பதி-திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனி, ஞாயிறு, மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல 2 மலைப்பாதைகள் உள்ளது. அதில் 2வது மலைப்பாதையில் திருமலைக்கு செல்லவும், அங்கிருந்து 1வது மலைப்பாதையில் திரும்பி வரும் … Read more

’டைவர்ஸ் கேக்க இதுகூட நல்ல ஐடியாதான் போலவே’ Prank வீடியோவும், நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷனும்!

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சில prank வீடியோக்கள் எரிச்சலூட்டுவையாக இருந்தாலும், பல பிராங்க் வீடியோக்கள் நகைப்பை ஏற்படுத்துவதை தவறாது. மனைவியை வெறுப்பேற்றுவதற்காக கணவன் செய்யும் குறும்புத்தனமான பிராங்க் வீடியோக்களெல்லாம் இணையவாசிகளை கவர்வதில் கெட்டிதான். அந்த வகையில், கணவன் ஒருவர் மனைவியின் மெத்தைக்கு பதில் அதே சைஸில், பாத் டப்பை வைத்து அதில் தண்ணீரை நிரப்பி, அதன் மேல் பெட் ஷீட்டை வைத்து மூடி, மெத்தை போல இருப்பதற்காக தலையணையையும் வைக்கிறார். சில மணிநேரங்கள் கழித்து செல்ஃபோன் பேசியபடியே மனைவி … Read more

Kaali Poster Issue:வைரலாகும் மோடி குறித்த லீலா மணிமேகலையின் சர்ச்சை ட்வீட்!

பிரபல ஆவணப்பட இயக்குநரான லீலா மணிமேகலை, தமது ‘காளி’ ஆவணப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் காளி வேடமிட்டிருந்த பெண், ஒரு கையில் சூலமும், மறு கையில் சிகரெட் புகைப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த போஸ்டர் இந்து மத கடவுளை அவமதிப்பது போன்று உள்ளதாக கூறி, பல்வேறு அமைப்புகள் லீலா மணிமேகலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மத உணர்வுகளை … Read more

அதிக பாரத்துடன் சென்றதால் மண்சரிவு ஏற்பட்டு குளத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் நீந்திக் கரையேறி உயிர்தப்பினார்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குறுகிய பாதையில் ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி பாரம் தாங்காமல் அங்கிருந்த குளத்தில் கவிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. தனுவச்சபுரம் பகுதியில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணிக்காக இந்த லாரி ஜல்லிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் இருக்கும் குளத்தை ஒட்டியுள்ள ஒரு குறுகிய சாலையில் டிரைவர் லாரியை இயக்கியுள்ளார். மழையால் குளத்தின் சுற்றுசுவர் சேதமடைந்திருந்த நிலையில், அதிக பாரத்துடன் லாரி சென்றதால் அந்த சுற்றுசுவர் சரிந்து சாலையில் மண்சரிவு … Read more

ஆகாசா ஏர் விமான நிறுவனம் செயல்பாடுகளைத் தொடங்க டிஜிசிஏ அனுமதி

டெல்லி: ஆகாசா ஏர் விமான நிறுவனம் செயல்பாடுகளைத் தொடங்க டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது. ஜூலை மாத இறுதியில் சேவை தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

”இந்தியாலதான் இப்படிலா நடக்கும்போல” – அடடே போட வைத்த மணமகன் ஊர்வலம்!

பருவமழையால் மும்பையின் சாலைகளெல்லாம் வெள்ளமாக இருக்கும் அதேவேளையில், மணமகனின் திருமண ஊர்வல வீடியோ காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி அடடே போட வைத்திருக்கிறது. திபான்ஷு கப்ரா என்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பகிர்ந்த ட்விட்டர் வீடியோதான் இணையவாசிகளிடையே பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. इससे Epic बारात मैंने आज तक नहीं देखी. VC – SM pic.twitter.com/4JhqeAkIjD — Dipanshu Kabra (@ipskabra) July 6, 2022 அதில், கொட்டும் மழையில் மணமகன் பழங்காலத்தில் இருந்த பேருந்து … Read more