ஓர் ஆண்டில் 100 குற்றவாளிகள் கைது: டெல்லி காவல் துறையில் 52 பெண் போலீஸுடன் ‘தேஜஸ்வினி’ திட்ட சாதனை

புதுடெல்லி: கிராமப்புறப் பெண்களுக்கு உதவி செய்ய டெல்லி அரசு தேஜஸ்வினி எனும் பெயரில் ஒரு திட்டம் அமலாக்கியது. இக்குழுவின் 52 பெண் போலீஸார் ஓர் ஆண்டில் 100 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டமாக டெல்லி காவல்துறை சார்பில் ‘தேஜஸ்வினி’ அமலாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பெண் போலீஸார் மட்டும் உறுப்பினராக அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஸ்கூட்டி, பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் பணிக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்று பெண் போலீஸார் டெல்லியின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் பெண்களுக்கு … Read more

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தில் திருத்தம் – மத்திய அரசு அதிரடி!

விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிமுகப்படுத்தினார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம், விளையாட்டுத் துறையின் திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றை டெல்லியில் துவங்கி வைத்தார். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களின் … Read more

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்றும் மற்றொரு தீவிரவாதியை அடையாளும் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Source link

உ.பி-யில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்.: ரூ.11,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை

உ.பி: உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணித்ததால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். ஓட்டுநரை தவிர்த்து 27 பேருடன் சென்ற ஆட்டோவுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.11,500 அபராதம் விதித்தனர்.

காரைக்கால் திருவிழாவுக்காக டன் கணக்கில் இறங்கும் மாம்பழங்கள்… அதிரடி ஆய்வில் அதிகாரிகள்

காரைக்காலில் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ள மாங்கனி திருவிழாவை முன்னிட்டு டன் கணக்கில் இறக்குமதியான மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா இன்று இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்க உள்ளது. இதையடுத்து நாளை மறுதினம் 13-ஆம் தேதி பிச்சாண்டு மூர்த்தி வீதி உலாவில் மாம்பழம் இரைத்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் … Read more

ஒரு ஆட்டோவில் 27 பயணிகள்: அதிர்ச்சியில் உறைந்த உ.பி போக்குவரத்து போலீஸ்

லக்னோ: ஒரே ஆட்டோவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 27 பேர் பயணம் செய்து போக்குவரத்து காவல்துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அதிவேகத்தில் பாய்ந்த அந்த ஆட்டோவை மறித்து அதிலிருந்து ஒவ்வொரு நபராக இறக்கி அனைவரையும் போலீஸார் எண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிந்தி கோட்வாலி மற்றும் ஃபதேபூர் இடையே ஒரு ஆட்டோ அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை போக்குவரத்து காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். ஆட்டோ … Read more

2023-ம் ஆண்டில் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் -அமைச்சர் ஜிதேந்திர சிங்

ககன்யான் திட்டத்தின் ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், அடுத்த ஆண்டில் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பபடுவார்கள் எனக்கூறினார். இந்தாண்டு இறுதிக்குள் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம்  இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தெரிவித்த அவர், முதற்கட்ட சோதனையில் விண்கலம் மட்டும் செலுத்தப்படும் என்றும், இரண்டாம் கட்ட சோதனையில் வியோமித்ரா ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார். சோதனைக்கு பின் 2023-ம் ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு இந்தியர்கள் விண்வெளிக்கு செல்வார்கள் என அமைச்சர் … Read more

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்தார். மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில்  இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக் கூட்டத்திற்கு 1,272 இடங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.971 கோடி மதிப்பில் 62000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் … Read more

பாஜக அணிக்கு மாறத் தயாராகும் கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: இருவரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை

பனாஜி: கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் ஆளும் பாஜக அணிக்கு தாவ முயன்ற வருவதாக கூறப்படும் நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோரை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் தலைமை இன்று கூறியுள்ளது. கோவாவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 3 போ் ஆளும் பாஜகவுக்கு மாற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் அண்மையில் முதல்வராக இருந்த சிவசேனை தலைவா் உத்தவ் … Read more

27 பேரை ஒரேசமயத்தில் ஏற்றிச்சென்ற ஆட்டோ.. துரத்திப் சென்று மடக்கி பிடித்த போலீசார்..!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் 27 பேரை ஒரே சமயத்தில் ஏற்றிச் சென்ற ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். வேகமாக சென்ற அந்த ஆட்டோவை துரத்திப் பிடித்த போலீசார் அதன் உள்ளே ஏராளமானோர் திணித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டதும் திகைத்துப் போனார்கள். ஒட்டுநரையும் சேர்த்து அந்த ஆட்டோவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மொத்தம் 27 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த ஆட்டோ போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. Source link