டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக … Read more

லடாக் எல்லையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள்

புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், அவை லடாக் எல்லைப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு உள்நாட்டிலேயே ஆயுதங்கள் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. அதன்படி நிறைய ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுகுறித்து ராணுவத்தின் வடக்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி நேற்று கூறும்போது, “உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐபிஎன்வி என்ற கவச வாகனங்கள் இந்திய ராணுவத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சேர்க்கப்பட்டன. மலைப்பாங்கான லடாக் பகுதியில் … Read more

'சிவபெருமான் நஞ்சை உண்டது போல் பொய்களை மோடி தாங்கி கொண்டார்' – அமித் ஷா பளீச்!

குஜராத் கலவர வழக்கில், கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கிக் கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தினார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை … Read more

மருத்துவமனையின் 7-வது தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்த நோயாளி-பதைபதைக்கும் காட்சி

கொல்கத்தாவில், மருத்துவமனையின் 7-வது மாடியின் விளிம்பில் அமர்ந்த நோயாளி, தவறி கீழே விழும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. மல்லிக்பசார் பகுதியில் அமைந்துள்ள நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், 7-வது மாடியின் விளிம்பில் அமர்ந்துகொண்டு கீழே இறங்கி வர மறுப்பு தெரிவித்து வந்தார். அவரை மீட்க தீயணைப்புத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், நோயாளி தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் வயநாட்டில் போராட்டம்..!!

கேரளா: ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் வயநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிரதமர் மோடி வருகைக்காக அமைக்கப்பட்ட பெங்களூரு சாலைகள் ஒரே வாரத்தில் சேதம்

பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் மோடி வருகைக்காக ரூ.23 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை இரவு நேரத்தில் பெய்த கனமழையை தாங்க முடியாமல் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக பெங்களூருவில் ரூ. 23.5 கோடி செலவில் 14 கிமீ சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டன. கெங்கேரி முதல் கொம்மாகட்டா சாலை (7 கிமீ), மைசூர் சாலை (0.15 கிமீ), ஹெப்பால் மேம்பாலம் (2.4 கிமீ), துமகுரு சாலை (0.90 … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் – பிரதமர், கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய … Read more

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் – 27க்குள் பதிலளிக்க உத்தரவு!

சிவசேனா அதிருப்தியாளர் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கி உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீசை, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் அனுப்பி உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். … Read more

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள 13000 மது பாட்டில்கள் அழிப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 2 மாதங்களில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான அண்டை மாநில மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 13 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சாலையில் அடுக்கப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டன. Source link

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. 10 பேர் மரணமடைந்தனர். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்பட மாநிலங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கேரளாவில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 22,770 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. … Read more