தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை: ரூ.4 கோடி மதிப்புள்ள 8.3 கிலோ தங்க நகைகள் திருட்டு

ஹைத்ராபாத்: தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து, கொள்ளையர்கள் நகைகளையும், பணத்தையும் அள்ளிச்சென்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பூசாப்பூரில், தெலுங்கானா கிராமிய வங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த வங்கியில், கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டது. நேற்று வழக்கம் போல், அதிகாரிகள் வங்கியை திறப்பதற்காக வந்தபோது, வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த வங்கி லாக்கர் கேஸ் … Read more

மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை: மும்பையில் ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பெய்துவரும் கனமழையால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்திப் பத்திரமான இடங்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 5 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மும்பைக்கு மும்பை மழை: முக்கியத் தகவல்கள் 1. தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாபூர் உள்ளிட்ட … Read more

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த சரக்கு லாரி.!

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டிற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். முன்னதாக, நேற்று குலு பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 3,000 பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது Source link

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13,086 ஆக பதிவு… 19 பேர் பலி… ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 13,086 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,15,547 ஆக உயர்ந்தது.* புதிதாக 19 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

'அட… இத்தனை பேருந்துகள் தகுதியற்றவையா?'- கர்நாடகாவில் வெளியான பகீர் தகவல்

கர்நாடக மாநிலத்தில் ஓட்டுவதற்கு தகுதியற்ற 3,768 பேருந்துகளை கே.எஸ்.ஆர்.டி.சி. இயக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் மராட்டியத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபகாலமாக கர்நாடக அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவ்வாறு விபத்தில் சிக்கும் பெரும்பாலான அரசு பேருந்துகள் 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியவை என்று கூறப்படுகிறது. பொதுவாக … Read more

அகிலேஷ் யாதவ் மீது உ.பி. போலீஸில் தேசிய மகளிர் ஆணையம் புகார்

புதுடெல்லி: நுபுர் சர்மா சர்ச்சை கருத்து தெரிவித்தது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில், “நாட்டில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவின் முகம் மட்டுமல்ல, அவரது உடலும் மன்னிப்பு கோர வேண்டும். அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார். இதுகுறித்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, உ.பி. காவல் துறை இயக்குநர் டி.எஸ்.சவுகானுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “நுபுர் சர்மா பற்றி … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் இன்று துவக்கம்!

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை மாதம் 5ஆம் தேதி (இன்று) தொடங்கும். ஜூலை 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். அதன் மீதான பரிசீலனை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும். … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை

ஹைதராபாத் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ. 5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது.

பஞ்சாப்: பாடகர் சித்துவை கொலை செய்தபின் துப்பாக்கியுடன் கொண்டாடிய இளைஞர்கள்.. பகீர் வீடியோ

பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்துவிட்டு துப்பாக்கிகளுடன் அதனை கொலையாளிகள் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல பஞ்சாபி மொழி பாடகரான சித்து மூசே வாலா அவரது சொந்த மாவட்டமான மானசாவில் கடந்த மே 21-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கொலை குறித்து பஞ்சாப் மாநில காவல்துறையினருக்கு கடுமையான அழுத்தங்கள் உருவானது. குறிப்பாக துப்பாக்கி கலாசாரம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவை குறித்து காங்கிரஸ் பாஜக … Read more

வாரணாசி நீதிமன்றத்தில் கியான்வாபி மசூதி வழக்கு தள்ளிவைப்பு – முஸ்லிம்கள் தரப்பு வாதம் தொடங்கியது

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் கியான்வாபி மசூதி மீதான வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் துவங்கியது. இதில் முஸ்லீம்கள் தரப்பில் நடைபெற்ற வாதம் ஜுலை 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்காரி கவுரி அம்மனை தரிசிக்கும் வழக்கில் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கிற்கு தடை கேட்டு மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதற்கு அடிப்படையாக மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ஐ சுட்டிக் காட்டியிருந்தனர். இதை … Read more