அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… உடல் கருகிய நிலையில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு

டெல்லி ரோகிணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். பூத் கலான் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் இயங்கிய ஷூ தயாரிப்பு மற்றும் குடோனில் தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். குடியிருப்புகளில் தீக்காயங்களுடன் சிக்கிக் கொண்ட 8 பேர் மீட்கப்பட்ட நுலையில், உடல் கருகிய நிலையில் இளைஞரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். … Read more

திருப்புவனம் அருகே எஸ்ஐயை தாக்கி மண்டையை உடைத்த போலீஸ்காரர் கைது

திருப்புவனம்: திருப்புவனம் அருகே எஸ்ஐயை தாக்கி மண்டையை உடைத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழப்பூவந்தியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32).  இவர் இளையான்குடி காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூவந்தி கடை வீதியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த பூவந்தி எஸ்ஐ பரமசிவம், சம்பவ இடத்திற்கு  சென்று முத்துப்பாண்டியை கண்டித்து வீட்டிற்கு அனுப்பினார். நேற்று அதிகாலை பூவந்தி சோதனைச்சாவடியில் எஸ்ஐ பரமசிவம் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த முத்துப்பாண்டி … Read more

முற்றும் மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி – உத்தவ் தாக்கரே கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு

மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவருடன் சுமார் 40 சிவசேனா எம்எல்ஏக்களும் 7 … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – பிரதமர் மோடி முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் திரௌபதி முர்மு.!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த மாதம் 18ந் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று தனது வேட்புமனுவை தாக்கல் … Read more

பாஜ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் முர்முவுக்கு ஆதரவு அதிகரிப்பு: இன்று வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி: பாஜ கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவு கிடைத்து வருகிறது. பிஜு ஜனதா தளம், பாஜ கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற முர்மு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மோடி முன்னிலையில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். ஜனாதிபதி  தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி … Read more

சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்களை 30-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

சென்னை: சிங்கப்பூரின் ‘டிஎஸ்-இஒ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஜூன் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளன. நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள், இஸ்ரோ மூலம் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜூன் … Read more

3 மக்களவை, 7 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல்: திரிபுராவில் 76% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 3 மக்களவை, 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தன. உத்தரப்பிரதேசத்தின் அசாம்கர் தொகுதி மக்களவை எம்பியான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எம்எல்ஏ.வாக தேர்வானதை அடுத்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல், இதே கட்சி மூத்த தலைவர் அசாம் கானும் சட்டப்பேரவைக்கு தேர்வானதால் ராம்பூர் மக்களவை தொகுதியில் ராஜினாமா செய்தார். பஞ்சாபின் சங்ரூர் தொகுதியானது, முதல்வர் பகவத் மான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் காலியானது. … Read more

ஓராண்டாக காலியாக இருந்த பதவி என்ஐஏ இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்

புதுடெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) என்ற தனி அமைப்பை ஒன்றிய அரசு அமைத்தது. இதன் இயக்குனராக இருந்து வந்த ஒ.சி.மோடி கடந்தாண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்த பதவிக்கு நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படவில்லை. சிஆர்பிஎப் படையின் இயக்குனர் ஜெனரல் குல்தீப் சிங், இந்த பதவியை தற்காலிகமாக கவனித்து வந்தார்.இந்நிலையில், இதன் இயக்குனர் பதவிக்கு பஞ்சாப் மாநில முன்னாள் டிஜிபி.யான … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜூலை இறுதியில் ஆஜராக வேண்டும்: சோனியாவுக்கு அவகாசம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூலை இறுதியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை அவகாசம் அளித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை 5 நாட்கள் விசாரணை நடத்தியது. அவரிடம் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அவரை அரசியல் காரணங்களுக்காக பாஜ.வின் உத்தரவின் பேரில் அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் தலைவர்கள், எம்பி.க்கள் டெல்லியில் தொடர்ந்து பல நாட்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா … Read more

'24 மணிநேரத்தில் மும்பை வந்தால் கூட்டணியில் இருந்த வெளியேற தயார்' – சிவசேனா அறிவிப்பு

மும்பை: 24 மணிநேரத்துக்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை வந்தால் மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து விலக தயார் என சிவசேனா அறிவித்துள்ளது. மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை 37 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்துள்ளனர். இவர்கள் அஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்களின் கோரிக்கையாக, சிவசேனா மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது இருக்கிறது. இந்தக் கோரிக்கை தொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் … Read more