அயோத்தி வந்தடைந்த ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்.. பக்தர்களுக்கு மாலை அணிவித்து மலர்தூவி வரவேற்பு!

பாரத கௌரவம் என்ற பெயரில் இயக்கப்படும் ராமாயணம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அயோத்தியை வந்து அடைந்தது. ரயிலில் இருந்து வந்த பக்தர்களுக்கு அயோத்தி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர்சிங், எம்.பி., மேயர் ஆகியோர் மலர் தூவி பக்தர்களை வரவேற்றனர். சிறப்பு ரயிலின் வசதிகளை பயணிகள் பாராட்டினர். சுற்றுலா பயணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் வரவேற்றார். இந்தியா முழுவதும் 17 நாட்கள் 18 இரவுகள் இந்த சிறப்பு ரயில் பயணிக்கிறது. Source link

புதுமுக நடிகை பலாத்காரம் நடிகர் விஜய் பாபுவுக்கு கேரள ஐேகார்ட் முன்ஜாமீன்

திருவனந்தபுரம்: மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஓட்டல் உட்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக மலையாள புதுமுக நடிகை ஒருவர் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது கொச்சி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: நாளை திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி … Read more

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய முடிவு.? அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருப்பதால் போலீசார் குவிப்பு..!

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யக்கூடும் என கூறப்படும் நிலையில் மும்பையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்களும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருப்பதால் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ள நிலையில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும், பால்தாக்கரே வலியுறுத்திய இந்துத்துவா கொள்கையை பாதுகாக்க வேண்டும் என்று 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர் Source link

புஷ்பா 2ல் இருந்து வெளியேறும் ராஷ்மிகா

ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா: தி ரைஸ் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனை சுகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா: தி ரூல் என்ற பெயரில் 2023ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2ம் பாகத்தில் ராஷ்மிகா இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.முதல் பாகத்தில் கூலி தொழிலாளியாக இருக்கும் அல்லு அர்ஜுன் செம்மரக்கடத்தல் தொழிலின் தலைவர் ஆவது … Read more

‘லைஃபை தொலைச்சுராத குமாரு’ : ஓவர் லோடு பைக் ஓட்டிக்கு தெலங்கானா போலீஸ் சொன்ன அட்வைஸ்!

போக்குவரத்து விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கச் சொல்லி தொடர்ந்து டிராஃபிக் போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டும், அதனை மீறுவோர் மீது அபராதங்கள் விதிக்கப்பட்டும் வந்த வண்ணம் இருந்து வருகிறது. ஆனால், சில வாகன ஓட்டிகளின் விபரீதமான செயலால் சாலை விபத்துகள் நேரும் நிலை உருவாகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறுவது அவ்வப்போது நிகழ்கிறது. இதுபோன்ற விபத்துகள் தாறுமாறாக வண்டி ஓட்டுவதால் மட்டுமல்லாமல் அதிகளவிலான பாரத்தை வண்டியில் ஏற்றுவதாலும் நிகழ்கிறது. அந்த வகையில், தன் முன் மூட்டை மூட்டையாக பொருட்களை அடுக்கி வைத்து … Read more

ஒடிசாவில் உள்ள சிவன் கோயிலை சுத்தம் செய்து வழிபட்டார் திரவுபதி முர்மு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி வேட்பாளராக, ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரவுபதி, குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெறுவார். இவர் நேற்று காலை ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ராய்ரங்பூர் என்ற பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றார். அங்கு வழிபடுவதற்கு முன் கோயிலை தானே பெருக்கி சுத்தம் செய்தார். திரவுபதி முர்மு … Read more

ரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் முறை இந்தியாவில் அறிமுகம்

ரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை மூலம் மர்பக புற்றுநோய் இருப்பதை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியும் என்றும் பரிசோதனை முடிவுகள் 99 சதவீதம் உறுதிபடுத்தும் வகையில் உள்ளதாகவும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெண்கள், மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்று பூராண குணம் பெற முடியும். நாசிக்கை சேர்ந்த Datar புற்றுநோய் … Read more

குட்டிக்கரணம் போட்டு விளையாடியபோது காயம் நடிகருக்கு கழுத்தில் ஆபரேஷன்

பெங்களூரு: நடிகர் திகந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவாவில் முகாமிட்டிருந்தபோது, நடிகருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதால், அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல கன்னட நடிகர் திகந்த், கோடை விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அப்போது திகந்த், குட்டிக்கரணம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் சுளுக்கு மற்றும் காயம் ஏற்பட்டது. அவர் அலறியபடி குப்புற விழுந்தார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து அவரை கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், … Read more

பிப்ரவரி 5-ல் முதன்முதலாக கணித்த ‘இந்து தமிழ்’ நாளிதழ் – ஆசிரியை பணி முதல் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வரை திரவுபதி முர்மு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, வேட்பாளராக்கப்படலாம் என உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் பிப்ரவரி 5-ல் முதன்முதலாக ‘இந்து தமிழ்’ நாளேடு கணித்து வெளியிட்டது. இது உண்மை எனும் வகையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட பழங்குடி வகுப்பின் முர்மு, பல முக்கியத்துவங்கள் பெற்றுள்ளார். மத்தியில் பிரதமராக நரேந்திர மோடி 2014-ல் பதவி ஏற்றது முதல் அவரது அரசின் பல முக்கிய நடவடிக்கைகளை பத்திரிகையாளர்களால் கணிக்க முடியாமல் இருந்தது. இப்பட்டியலில் பண … Read more