நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட, 27 பேர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர், இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் … Read more