இந்தியாவில் புதிய வகை கொரோனா: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்!

நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வழக்கமான இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் புதிய … Read more

குஜராத் கடல் எல்லைக்குள் நுழைந்த 4 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 4 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த பத்து மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் எல்லையில் நடமாட்டம் இருப்பதை கண்டுபிடித்த எல்லை பாதுகாப்பு படையின் அதிரடி படையினர் உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்தனர். தொடர்ந்து இந்திய கடல் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Source link

கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெங்களூரு: கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் நீர் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்திறப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால் கர்நாடக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காளிதேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய திரிணமூல் எம்.பி. மஹுவா மீது வழக்கு பதிவு

கொல்கத்தா: காளிதேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதன் மூலம் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவை கைது செய்ய வேண்டும் என மேற்கு வங்க பாஜக கோரியுள்ளது. இயக்குநர் லீனா மணிமேகலை உருவாக்கிய ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அந்த போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் புகைப்பிடிப்பது போலவும் மற்றொரு கையில் தன்பாலினத்தவரின் வானவில் கொடியை ஏந்தியிருப்பதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் … Read more

மிஸஸ் இந்தியா அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கௌசால்..!

மும்பையில் நடைபெற்ற மிஸஸ் இந்தியா அழகிப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கௌசால் என்ற பெண் மகுடம் சூடினார். திருமணம் முடிந்த பெண்களுக்கு மிஸஸ் இந்தியா என்ற போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற சர்கம் கௌஷல் கடற்படை அதிகாரியின் மனைவி ஆவார். மிஸ் இந்தியா போட்டியில் அவர் போட்டியிட வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் விரும்பிய போதும் அவர் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார். இதை அறிந்த அவர் கணவரும் ஒத்துழைப்புத் தர மிஸஸ் … Read more

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து 5000 கனஅடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 22,000 கனஅடியில் இருந்து 33,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

வரி ஏய்ப்பு புகார்: 'DOLO-650' மாத்திரை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு

டோலோ-650 மாத்திரை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கொரோனாவின் முக்கிய அறிகுறியான காய்ச்சல் பாதிப்பை குறைக்க டோலோ-650 மாத்திரை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அதன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், 350 கோடி டோலோ மாத்திரைகள் விற்பனையானதாகவும் ஓராண்டில் 400 கோடி வருவாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெங்களூரு உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை … Read more

கடலோர கர்நாடகாவில் அதி கனமழை: நிலச்சரிவில் ஒருவர் பலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: கடலோர கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். கடலோர கர்நாடகாவில் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனே அப்புறப்படுத்தி வேறு இடங்களில் தங்கவைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 2009ல் கடலோர … Read more

கேரளாவில் பழைய இரும்பு பாத்திரத்தை திறந்த போது ஸ்டீல் வெடிகுண்டு வெடித்து தந்தை, மகன் பலி..!

கேரளாவில் வீட்டில் ஸ்டீல் வெடிகுண்டு வெடித்ததில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்தனர். கண்ணூர் மாவட்டம் மட்டனூர் பகுதியில் அசாமை சேர்ந்த 5 பேர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பழைய இரும்புப்பொருட்கள், பழைய பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கி தரம் பிரித்து விற்பனை செய்து வந்தனர். நேற்று மாலை முதலாவது தளத்தில் ஃபசல் ஹக் என்பவரும் அவரது மகன் ஷஹீதுல்லும் தாங்கள் சேகரித்த பொருட்களில் இருந்த இரும்பு பாத்திரம் ஒன்றை திறந்துள்ளனர். அப்போது அந்த பாத்திரம் … Read more

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : பிரதமர் மோடி கேட்டறிந்தார்!!

பாட்னா : பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டி உள்ளது. உடல்நிலை மோசமானதால் ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ், நேற்று முன்தினம் தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவும் காயமும் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனைக்கு சென்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு … Read more