ஓடையில் சேற்றை கழுவச் சென்ற 1ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!

சிக்மகளூரில் பெய்துவரும் கனமழையால் வெள்ள நீரில் 1ம் வகுப்பு படிக்கும் சிறுமி அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மலை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் நதிகள் ஓடை கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் சிக்மகளூர் தாலுகாவில் உள்ள ஹோஸ்பேட் கிராமத்தில், கால்கள் சேறும் சகதியுமாக இருந்ததால், கால் கழுவ ஓடையில் இறங்கிய 1ம் வகுப்பு சிறுமி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த … Read more

பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைத்தது மத்திய அரசு

சென்னை: பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதன்படி 2-வது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இந்நிலையில், இந்த … Read more

இந்திய அரசுக்கு எதிராக ட்விட்டர் வழக்கு!

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என தங்களுக்கு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகும், ட்விட்டர் தளத்தில் சில பதிவுகள் நீக்கப்படாமல் உள்ளது. அதனை நீக்கவில்லை என்றால் என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மத்திய அரசின் எச்சரிக்கையை … Read more

சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் இரு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்த விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஆட்டோ மீது மோதி சில அடி தூரம் இழுத்துச் சென்ற நிலையில், இரு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் இரு வாகனங்களில் இருந்த ஓட்டுநர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   Source link

மோடி குறித்த அவதூறு வழக்கு; ராகுல்காந்தியின் மனு தள்ளுபடி: ஐார்கண்ட் ஐகோர்ட் உத்தரவு

ராஞ்சி: தன் மீதான அவதூறு வழக்கில் ஆஜராக கோரி அனுப்பப்பட்ட சம்மன் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘நீரவ் மோடி, லலித் மோடி (வங்கிக் கடன் மோசடி செய்த குற்றவாளிகள்) போன்ற மோடிகள் திருடர்கள்’ என்று பிரதமர் மோடியை குறிப்பிடும் வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சு … Read more

ஒரே நேரத்தில் 2 மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா! பின்னணி என்ன?

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும் மத்திய உருக்குத் துறை அமைச்சரான ஆர்சிபி சிங்கும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நக்வி ராஜினாமா பின்னணி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நக்வி செயல்பட்டு வந்தார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் முடிவடைய உள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து பல தலைவர்கள் மாநிலங்களவைக்கு சமீபத்தில் … Read more

ஆசம் கானின் மனைவிக்கு அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானின் மனைவிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். பல்வேறு வழக்குகளில் உத்தரபிரதேச மாநிலத்தின் சீதாப்பூர் சிறையில் இருப்பவர் முன்னாள் எம்.பி. ஆசம் கான். வழக்குகளில் ஜாமீன் பெற்று தற்போது வெளியே உள்ளார் ஆசம் கான். இவர் தற்போது ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு ஆசம் கானின் மனைவி … Read more

Covid Booster Dose: பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு … Read more

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட பொதுமக்கள்

சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை, பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேகவெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்திருந்த பெண் ஒருவர், இடிபாடுகளுக்கிடையே கைகளை நீட்டி தன்னை காப்பாற்றக் கோரினார். காயங்களுடன் இருந்த பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர்.

லீனாவின் போஸ்டர் விவகாரம்; ‘காளி’ குறித்து பெண் எம்பி சர்ச்சை கருத்து: திரிணாமுல் காங்கிரஸ் திடீர் விளக்கம்

கொல்கத்தா: இயக்குனர் லீனாவின் போஸ்டர் விவகாரம் தொடர்பாக திரிணாமுல் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அது அவரது தனிப்பட்ட கருத்து என்று திரிணாமுல் கட்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை சமீபத்தில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, தன்பால் ஈர்ப்பாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. … Read more