ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் ஆகிறார் யஷ்வந்த் சின்ஹா?

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்ஹா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் … Read more

இடுப்பளவு வெள்ள நீரில் பிறந்த குழந்தையை புன்னகையுடன் தூக்கிச் சென்ற தந்தை

அசாமில், இடுப்பளவு வெள்ள நீரில், பிறந்த குழந்தையை புன்னகையுடன் தந்தை தூக்கிச்செல்லும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் 47 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில்சார் (Silchar) பகுதியில் நடந்த இந்த காட்சியை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர் அசாமில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். Source link

முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயார்: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஹிண்டே 12க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுடன் நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளார். ஏக்நாத் ஹிண்டே முடிவால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரிவர்ஸ் மோடில் இயங்கும் கடிகாரம்.. அதுவும் இந்தியாவில்.. எங்கு? ஏன் தெரியுமா?

வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தோடு, பன்முகத்தன்மைக் கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில் உள்ள ஒரு கிராம மக்களின் கடிகாரம் பின்னோக்கி இயங்கும் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? பொதுவாகவே பழங்குடியினர்கள், மலைவாழ் மக்கள் புதுமையான, மாறுபட்ட வழக்கங்களை கொண்டவர்களாகவே இருப்பர். அந்த வகையில் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோண்ட் என்ற மலைவாழ் மக்கள் பின்னோக்கி இயங்கும் கடிகாரங்களையே காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். வழக்கமாக கடிகாரங்கள் க்ளாக்வைஸில் அதாவது வலமிருந்து இடப்புறமாக சுற்றும். … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா?

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மூன்று தலைவர்கள் மறுத்துள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் … Read more

பனி படர்ந்த 14 ஆயிரம் அடி உயரத்தில் யோகா செய்த வீரர்கள்.!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் வீரர்கள் யோகா செய்தனர். தரையில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் பனி படர்ந்த ரோஹ்தாங் பாஸில் அவர்கள் யோகா செய்தனர். இதேபோல் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களும் யோகா செய்தது. Source link

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு..!!

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக வெங்கைய நாயுடுவுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜெபி நட்டா ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மாநிலத்துக்கு மாநிலம் மாறும் மதிப்பு… எப்படி நடக்கிறது குடியரசுத் தலைவர் தேர்தல்?

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைவதால், அடுத்த 16-வது குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஜூலை 18-ம் தேதி புதிய குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. யார் – யார் வாக்களிக்கலாம்? குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த எம்எல்ஏக்களும், நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்கள் ஆவர். இவர்கள் ‘எலக்டோரல் காலேஜ்’ … Read more

மத்திய அரசின் அக்னிபாதை விவகாரத்தில் முதல்வர் நிதிஷ்குமார் மவுனத்தால் பாஜக அதிருப்தி

புதுடெல்லி: மத்திய அசின் அக்னிபாதை திட்டம் மூலம் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு நாட்டின் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில், மிக அதிகமான எதிர்ப்பு பிஹாரில் நிலவுகிறது. போராட்டத்தினால், ரயில் உள்ளிட்ட மத்திய அரசின் பல கோடி சொத்துக்கள் சேத மடைந்துள்ளன. பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவளிக்கும் பாஜகவின் ஆறுக்கும் மேற்பட்ட அலுவலகங்களும், அக்கட்சியின் துணை முதல்வர் குடியிருப்பும் சூறையாடப்பட்டுள்ளன. பாஜக வின் பல்வேறு தொகுதி எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் போராட்டக் காரர்களால் … Read more

முதல்வர் உத்தவ் ஆட்சிக்கு ஆபத்து – அமைச்சர் உட்பட 22 எம்எல்ஏக்கள் ஓட்டம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளும் கூட்டணி அரசு மீது அதிருப்தி காரணமாக, மாநில அமைச்சர் உட்பட 21 எம்எல்ஏக்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமேலவை தேர்தலில், ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சியுமான பாஜக, தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. இந்நிலையில், … Read more