புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானதை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானதை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் – காரணம் என்ன?

சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட்டுகள் (பிளாட்ஃபார்ம் டிக்கெட்) விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பல மாநிலங்களில் ரயில் எரிப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதனிடையே, அக்னிபாத் திட்டத்தை கண்டித்து நேற்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு (பார்த் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள எழும்பூர், சென்ட்ரல் உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் … Read more

காஷ்மீரில் 3 என்கவுன்ட்டரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின் குப்வார மாவட்டம், சண்டிகாம் லோலாப் பகுதியில் உள்ள காட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, கைது செய்யப்பட்ட சவுகத் அகமது ஷேக் என்ற தீவிரவாதி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் ராணுவ வீரர்களும் குப்வாரா மாவட்ட போலீஸாரும் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் தீவிர வாதிகளை தேடும் பணியில் ஈடு பட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் … Read more

பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான என்ஜினில் தீ பற்றியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை – விமான போக்குவரத்து இயக்குநரகம்

பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான என்ஜினில் தீ பற்றியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறுக்கிழமை டெல்லி நோக்கி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதி என்ஜின பகுதியில் தீப்பற்றியதாக வீடியோக்கள் வெளியாகின. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் முதற்கட்ட அறிக்கையில், விமான என்ஜின் பகுதியில் தீ பற்றியதற்கான தடயங்கள் காணப்படவில்லை என்றும், பறவை மோதி 4 பிளேடுகள் உடைந்து ரத்தக் கறைகள் மட்டுமே … Read more

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்படவுள்ளதாக தகவல்

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. பெரிய தேசிய நோக்கத்திற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என யஷ்வந்த் சின்கா ட்வீட் செய்தார். ‘எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதால் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என தெரிவித்தார்.  

தேர்தல் களத்தில் பஞ்சாயத்து அதிகாரியின் 3 மனைவிகள்… யாருக்குப் போகும் அவர் வாக்கு?

கிராம பஞ்சாயத்து செயலாளர் ஒருவர் தனக்கு மூன்றாவதாக மனைவி இருப்பதை மறைத்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய பிரதேச அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் சிங்ரவ்லி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்தின் செயலாளராக இருப்பவர் சுக்ராம் சிங். இவருக்கு குசும்காலி மற்றும் கீதா சிங் என இரு மனைவிகள் உள்ளனர். சிங்ரவ்லியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பிபர்காட் கிராம பஞ்சாயத்து தேர்தலில் சார்பஞ்சாயத்துதாரர் பதவிக்காக குசும்காலியும், கீதா சிங்கும் … Read more

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு – மத்திய அமைச்சர் சந்தேகம்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அமைச்சர் முரளிதரன் கூறியதாவது: கேரளாவில் கடந்த ஆண்டு நடந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கவலையும் சந்தேகமும் எழுந்துள்ளது. முதல்வரின் கீழ் செயல்படும் பொது நிர்வாகத் துறையின் செயல்பாடுகளும் ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுடனான அவரின் தொடர்புகளும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்கா..! ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்..

ஜார்க்கண்ட் மாநிலம் Lohardaga மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இரு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். Banda கிராமத்தை சேர்ந்த Sandeep Oraon என்பவரும் அதே பகுதியை சேர்ந்த Kusum Lakra என்ற பெண்ணும் 3 வருடங்களாக திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இதனிடையே Sandeep Oraon கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு பணிபுரியும் … Read more

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு கேவியட் மனு தாக்கல்

டெல்லி : அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. முப்படைகளில் 4 ஆண்டு கால சேவையில் இளைஞர்களை சேர்க்கும் வகையில் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கும் நிலையிலும், ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா … Read more

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும்: ராணுவ துணைத் தளபதி

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் என்று ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜூ தெரிவித்துள்ளார். ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’ திட்டம், கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் புதிய திட்டம் குறித்து … Read more