மக்களிடம் நுபுர் மன்னிப்பு கேட்கவேண்டும் – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து தவறாகப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த … Read more

அரியானாவில் மின்சார கார்களுக்கு 15 சதவிகிதம் தள்ளுபடி

மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரியானா அரசு 10 இலட்ச ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. மின்சார வாகனக் கொள்கைப்படி எலக்ட்ரிக் கார்களுக்கு 15 விழுக்காடு என்கிற அளவில் தள்ளுபடி கிடைக்கிறது. வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்கும் தள்ளுபடித் தொகையை, முதல் பத்தாண்டுகளில் மாநில அரசின் ஜிஎஸ்டியில் 50 விழுக்காடு தள்ளுபடி மூலம் திரும்பப் பெற வகை செய்யப்பட்டுள்ளது. Source link

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் மணிக்குட்டன் (51). இவரது மனைவி சந்தியா (46). இவர்களது மகள் அமேயா (18), அமீஷ் (16).என்ற மகனும் இருந்தனர். சந்தியாவின் சித்தி தேவகியும் (66) இவர்களுடன் வசித்து வந்தார். மணிக்குட்டன் வீட்டுக்கு அருகே ஒரு சிறிய ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மணிக்குட்டனின் ஓட்டலில் பஞ்சாயத்து சுகாதார அதிகாரிகள் … Read more

அடுத்தது தெலங்கானா?- பாஜகவுக்கு சந்திரசேகர் ராவ் சவால்

ஹைதராபாத்: மகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்து தெலங்கானா அரசை கவிழ்க்கப் போவதாக பாஜகவினர் கூறி வருகிறார்கள், அப்படி செய்தால் அதன் பிறகு நானும் மத்திய அரசை கவிழ்க்க வாய்ப்பு ஏற்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்த கட்சியான சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பாஜகவும் சிவசேனா அதிருப்தி அணியும் இணைந்து புதிய அரசை அமைத்தனர். சிவசேனா அதிருப்தி அணி … Read more

லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை

லாட்டரி மார்ட்டின் சொத்துகள் முடக்கம் ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை முடக்கப்பட்ட சொத்துகளில் வங்கி கணக்குகள் மற்றும் நிலங்களும் அடங்கும் – அமலாக்கத்துறை லாட்டரி எஸ் மார்ட்டினின் தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கின் கீழ் மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை   … Read more

அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 173 ஆக உயர்வு!!

டிஸ்பூர் : அசாமில் கனமழை நீடித்து வரக்கூடிய நிலையில், திப்ருகாரில் மத்திய பாதுகாப்பு படையினர் முகாமிற்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த வீரர்கள் இரவோடு இரவாக வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். தலைநகர் கவுகாத்தி உட்பட அசாமில் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர். திப்ருகரில் கடந்த 3 நாட்களாக கொட்டி வரும் மழையால் மத்திய பாதுகாப்புப் படையினர் முகாமிற்குள் வெள்ள நீர் புகுந்தது. … Read more

பாஜக – காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் – தெலங்கானாவில் பதற்றம்

தெலங்கானாவில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காங்கிரஸார் – பாஜகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ராணுவத்தில் இளைஞர்களை 4 ஆண்டுகள் பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தெலங்கானாவின் ஹனம்கொண்டா பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தப் போராட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து அங்கு பாஜகவினர் திரண்டனர். இதனால் இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் … Read more

மணிப்பூர் நிலச்சரிவு: உயிரிழந்தோர் 20 ஆக அதிகரிப்பு

இம்பால்: மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கனமழை காரணமாக, நேற்று முன்தினம் தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட ஏராளமானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது. நேற்று மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் … Read more

உணவகத்தை அதிகாரிகள் மூடியதால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை.. கேரளாவில் சோகம்..!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உணவகத்தை அதிகாரிகள் மூடியதால் மனமுடைந்த உரிமையாளர், குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார். அத்திங்கல் பகுதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கூறி, உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, உணவகத்தையும் தற்காலிகமாக மூடினர். இதனால், பெரும் மன உளைச்சலுக்குள்ளான உணவக உரிமையாளர், தனது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேருக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார்.  Source link

நுபுர் சர்மா மீது கொல்கத்தா காவல் துறையினர் லுக் அவுட் நோட்டிஸ்

மேற்கு வங்கம்: நுபுர் சர்மா மீது கொல்கத்தா காவல் துறையினர் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நுபுர் சர்மாவுக்கு  உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று போலீஸ் லுக் அவுட் நோட்டஸ் அனுப்பியுள்ளது.