சம்பல் பள்ளத்தாக்கில் மீண்டும் தலைதூக்கும் கொள்ளைக்காரர்கள்: சாலை ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டல்
புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் மீண்டும் கொள்ளைக்காரர்கள் தலைதூக்கும் நிலை உருவாகி உள்ளது. அங்குள்ள சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பூலன் தேவி தொடங்கிவைத்த கொள்ளை: மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அமைந்துள்ளது சம்பல் பள்ளத்தாக்கு. இப்பகுதி, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்கியிருந்தது. இங்குள்ள அரசியல்வாதிகளும் தேர்தல் சமயங்களில் சம்பலின் கொள்ளைக்காரர்களிடம் கையேந்தும் நிலை இருந்தது. இவர்களில் ஒருவராக இருந்த பூலன் தேவி … Read more