'அட… இத்தனை பேருந்துகள் தகுதியற்றவையா?'- கர்நாடகாவில் வெளியான பகீர் தகவல்

கர்நாடக மாநிலத்தில் ஓட்டுவதற்கு தகுதியற்ற 3,768 பேருந்துகளை கே.எஸ்.ஆர்.டி.சி. இயக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் மராட்டியத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபகாலமாக கர்நாடக அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவ்வாறு விபத்தில் சிக்கும் பெரும்பாலான அரசு பேருந்துகள் 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியவை என்று கூறப்படுகிறது. பொதுவாக … Read more

அகிலேஷ் யாதவ் மீது உ.பி. போலீஸில் தேசிய மகளிர் ஆணையம் புகார்

புதுடெல்லி: நுபுர் சர்மா சர்ச்சை கருத்து தெரிவித்தது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில், “நாட்டில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவின் முகம் மட்டுமல்ல, அவரது உடலும் மன்னிப்பு கோர வேண்டும். அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார். இதுகுறித்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, உ.பி. காவல் துறை இயக்குநர் டி.எஸ்.சவுகானுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “நுபுர் சர்மா பற்றி … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் இன்று துவக்கம்!

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை மாதம் 5ஆம் தேதி (இன்று) தொடங்கும். ஜூலை 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். அதன் மீதான பரிசீலனை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும். … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை

ஹைதராபாத் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ. 5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது.

பஞ்சாப்: பாடகர் சித்துவை கொலை செய்தபின் துப்பாக்கியுடன் கொண்டாடிய இளைஞர்கள்.. பகீர் வீடியோ

பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்துவிட்டு துப்பாக்கிகளுடன் அதனை கொலையாளிகள் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல பஞ்சாபி மொழி பாடகரான சித்து மூசே வாலா அவரது சொந்த மாவட்டமான மானசாவில் கடந்த மே 21-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கொலை குறித்து பஞ்சாப் மாநில காவல்துறையினருக்கு கடுமையான அழுத்தங்கள் உருவானது. குறிப்பாக துப்பாக்கி கலாசாரம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவை குறித்து காங்கிரஸ் பாஜக … Read more

வாரணாசி நீதிமன்றத்தில் கியான்வாபி மசூதி வழக்கு தள்ளிவைப்பு – முஸ்லிம்கள் தரப்பு வாதம் தொடங்கியது

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் கியான்வாபி மசூதி மீதான வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் துவங்கியது. இதில் முஸ்லீம்கள் தரப்பில் நடைபெற்ற வாதம் ஜுலை 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்காரி கவுரி அம்மனை தரிசிக்கும் வழக்கில் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கிற்கு தடை கேட்டு மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதற்கு அடிப்படையாக மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ஐ சுட்டிக் காட்டியிருந்தனர். இதை … Read more

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி..!

போர்ட்பிளேயர்: வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலையிலேயே தஞ்சமடைந்தனர். முதல் நிலநடுக்கம் 11.05 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்த நிலையில், மூன்றாவதாக … Read more

அவ்வளவு பாசமா? – இறந்த நபருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த கிராம மக்கள்

கிராமத் தலைவர் தேர்தலில் இறந்த நபர் ஒருவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்து அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராம மக்கள். மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்திலுள்ள கஜேரா கிராமத்தில் 1296 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு கிராமத் தலைவர் தேர்தல் ஜூலை 1ஆம் தேதி நடைபெற்றது. அதில் 1,043 பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் ரவீந்திர தாகூர், சந்திரபான் அஹிர்வார் மற்றும் வினோத் சிங் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே … Read more

லாலு பிரசாத் யாதவுக்கு தோள்பட்டை எலும்பு முறிவு

பாட்னா: பிஹாரில் கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இந்நிலையில் தலைநகர் பாட்னாவில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் மாடிப்படியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவும் முதுகில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாட்னா தனியார் மருத்துவமனையில் லாலு பிரசாத் … Read more

டிஜிட்டல் மையத்தில் உலகை வழிநடத்துகிறது இந்தியா – பிரதமர் மோடி

ரேஷன் கார்டுக்கும், பிறப்புச் சான்றிதழுக்கும் வரிசையில் நின்ற காலம் மலையேறி விட்டதாகவும், டிஜிட்டல் மயமாக்கத்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு சேவைகளுக்கான டிஜிட்டல் போர்ட்டல்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, காந்தி நகரில் துவக்கி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தொழில் தொடங்குவதை எளிதாக்கி, தொடக்க நிலை நிறுவனங்களுக்கு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் என்றார். நான்காம் தொழிற்துறை புரட்சியில் இந்தியா அங்கம் … Read more