டிரோன் நிறுவனப் பங்குகளை வாங்கும் அதானி..!
டிரோன் தயாரிப்பு நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கான உடன்பாட்டில் அதானி நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வேளாண்மைக்குப் பயன்படும் டிரோன்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளை விலைக்கு வாங்க அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது. இதன்மூலம் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான டிரோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. Source link