லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

லே: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கில் பேருந்து விபத்திற்குள்ளானதில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவரது நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியப் புலனாய்வுத் துறையின் எஃப்ஐஆர் படி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக 1999 ஜூலை 24 முதல் மார்ச் 5 2005 வரை செயல்பட்டபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் … Read more

லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7 வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ராணுவ வீரர்கள் 26 பேரை ஏற்றிச் சென்ற வாகனம், லடாக் அருகே சாலையில் இருந்து தடுமாறி ஷீயோக் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “பர்தாபூர் முகாமிருந்து 26 வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் ஒன்று முன்னணி துணை நிலையமான ஹனிஃப் பகுதிக்குச் சென்றது. சுமார் 9 மணிக்கு தோஷி பகுதியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் … Read more

லடாக் வாகன விபத்து: ராணுவ வீரர்கள் 7 பேர் பலி!

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வீரர்கள் 26 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி ராணுவ வீரர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, இந்திய விமானப்படையிடம் ராணுவம் உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் … Read more

கடைகோடி வரை திட்டங்களின் பயன்.. தொழில் நுட்பத்தால் சாதிக்கும் அரசு..!

நவீன தொழில் நுட்பங்களின் மூலம் அரசு திட்டங்களின் பயன் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இரு நாட்கள் நடைபெறும் தேசிய டிரோன் மகா உற்சவத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டிரோன் தொழில் நுட்பம் குறித்த நாட்டு மக்களின் ஆர்வம் ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது என்றார். நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் தொழில் துறைகளில் ஒன்றாக டிரோன் துறை உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசு நலத்திட்டத்தின் பயன் கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் … Read more

மும்பை போதைப்பொருள் வழக்கு – ஆர்யன் கான் உள்பட 5 பேர் விடுவிப்பு

மும்பை: மும்பை – கோவா சொகுசு கப்பலில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்ததாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6,000 பக்கங்களை தாக்கல் செய்துள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் … Read more

பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!

ஐதராபாத்: பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா வந்த போது ஐதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் மாநில வளர்ச்சி திட்டங்களின் நிலை குறித்த 17 கேள்விகளுடன் வைக்கப்பட்ட பதாகைகள் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவுக்கு பிரதமர் மோடி நேற்று வந்த போது வரவேற்பதை முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் புறக்கணித்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்துக்கு மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது என்?. என்று கேள்விகளை எழுப்பி ஐதராபாத் நகரின் முக்கிய இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. 2016ம் ஆண்டு தெலுங்கானா … Read more

ஆன்லைன் காதலனுடன் வாழ்வதற்காக ஆள் வைத்து கணவனை கொலை செய்த மனைவி

திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில், ஆன்லைன் காதலனுடன் வாழ்வதற்காக 6 லட்சம் கொடுத்து ஆள் வைத்து கணவனை மனைவி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு பட்டறை உரிமையாளராக தொழில் செய்து வருபவர் மொய்னுதீன் குரேஷி. இவருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜீபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவிக்கு 40 வயதாகும் நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஃபேஸ்புக்கில் … Read more

காணாமல் போகும் ரூ.2000 நோட்டு: புழக்கத்தில் 1.6% ஆக குறைந்தது

மும்பை: இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் மொத்த நோட்டுகளில் வெறும் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன. இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் உள்ளன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். இவற்றைப் புதிய 500, 1000 ரூபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் … Read more

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2 நாட்களுக்கு முன் மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்த நிலையில், அவரது தோழியான மஞ்சுஷா நியோகி என்ற மற்றொரு மாடல் அழகியும் தற்கொலை செய்துகொண்டார். கொல்கத்தாவின் பட்டூலி பகுதியை சேர்ந்த மஞ்சுஷா, தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தெரிவித்த அவரது தாயார், தனது தோழியான பிதிஷா டி மஜும்தார் இருநாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மஞ்சுஷா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக … Read more